முதலை தாக்கி ஒருவர் பலி

354 0

மட்டுவில், மகிழுர் கிராமத்தில் மீன்பிடிக்க சென்ற மீனவர் முதலையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

சுமார் 42 வயது மதிக்கதக்க ஒருவரே இன்று காலை மீன் பிடிக்க சென்ற போது முதலை தாக்குதலுக்குள்ளாகி உயிர் இழந்துள்ளதாக  முதற்க்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக களுவாஞ்சி குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்க்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment