சவுக்கடி கடற்கரையில் மீனவர்களின் இறால் கூட்டுக்குள் சருகு புலி

1015 25

யாழ்.சுழிபுரம்- சவுக்கடி கடற்கரையில் மீனவர்களின் இறால் பிடிப்பதற்கான கூட்டுக்குள் சருகு புலி ஒன்று சிக்கியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

சவுக்கடி கடற்கரையில் மீனவர்கள் இறால் பிடிப்பதற்கான கூடுகளை வைப்பது வழக்கம். இவ்வாறு நேற்று மாலை கூடுகளை வைத்துவிட்டு சென்ற மீனவர்கள் இன்று காலை திரும்பவும் கடற்கரைக்கு வந்தபோது இறால் கூட்டுக்குள் சருகு புலி ஒன்றை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.இதனையடுத்து பொலிஸாரின் ஒத்துழைப்புடன் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் குறித்த சருகு புலியை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment