பிரான்சில் நீதிக்கான ஈருருளிப் பயணம் நேற்று மூன்றாவது நாளில் troyes நகரை அடைந்தது!

13300 0

பிரான்சில் இருந்தது ஜெனிவா நோக்கிய மனிதநேய செயற்பாட்டாளர்களின் நீதிக்கான ஈருருளிப் பயணம் 05.09.2018 புதன்கிழமை மூன்றாவது நாளாக troyes நகரைச் சென்றடைந்தது.
முன்னதாக provins நகரத்தில் இருந்து காலை 9.00 மணிக்கு அகவணக்கத்தைத் தொடர்ந்து, மனிதநேய செயற்பாட்டாளர்களின் நீதிக்கான ஈருருளிப் பயணம் புறப்பட்டது. கடும் வெப்பமான காலநிலை மற்றும் மலைப்பாங்கான பாதைகளுக்கூடாக அவர்கள் கடும் சிரமத்திற்கு மத்தியில் பயணித்துவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பயணம் செல்லும் வழியில், முதலாம் உலக யுத்தத்தில் கொல்லப்பட்ட வீரர்களை நினைவுகூரும் தூபிக்கு மதிப்பளித்து வணக்கம் செலுத்தியதோடு பயணித்து, மாலை 15.30 மணியளவில் troyes நகரைச் சென்றடைந்தது.

பிரான்சில் மனிதநேய ஈருருளிப் பயணம் நான்காம் நாளில் வரலாற்று முக்கியம் வாய்ந்த நகரங்கள் ஊடாக பயணிக்கின்றது!

தியாக தீபம் திலீபனின் 31 வது ஆண்டு நினைவேந்தலுடன் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய மாபெரும் பொங்கு தமிழ் பேரணியை முன்னிட்டும் அதற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் பிரான்சில் இருந்து மனித நேய செயற்பாட்டாளர்களின் ஈருருளிப்பயணம இன்று 06.09.2018 வியாழக்கிழமை நான்காவது நாளாக troyes நகரில் இருந்து தொடர்கின்றது.
அங்கு முதலாம் இரண்டாம் மகா யுத்தத்தில் மரணித்த படையினர், பொதுமக்கள் நினைவாக கட்டப்பட்டிருக்கும் நினைவுத் தூபியின் முன்னால் அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிரான்சின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கூடாக Vitry le Franois நகரை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

 

Leave a comment