எம்மை நிம்மதியாக வாழ விடுங்கள்!- ரவிகரன்

275 0

தமிழர்கள் நாங்கள் இலங்கையின் பிரஜைகள் என்றால் எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள், எங்களை சீண்டிப் பார்க்காதீர்கள் என்று வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் பெயரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களகுடியேற்றங்களை தடுத்து நிறுத்த கோரி இன்று முல்லைத்தீவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்களின் பூர்வீக நிலங்களை பல வடிவங்களினூடாக இன்று அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதாவது வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், சட்டவிரோத மீன்பிடியாளர்கள் என்ற வகையிலே அபகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இது அனைத்தையும் ஜனாதிபதி அறிந்தும் அறியாதது போல் இருக்கிறார்.

எங்களுடைய மண் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த தருவாயில் எங்களுடைய இளைஞர்கள் புத்திஜீவிகள் இணைந்து இந்த மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றீர்கள். மேலும் ஏற்கனவே மீனவர்களுடைய போராட்டம் இதற்கு ஆரம்ப புள்ளியிட்டது என்பதனை யாரும் மறுக்கமுடியாது சுமார் அந்த போராட்டத்திலும் இரண்டாயிரத்துக்கு மேற்ப்பட்ட மீனவர்கள் ஒன்றுகூடி தங்களுடைய எதிப்பு நடவடிக்கையை முன்னெடுத்து எங்களுடைய தலைவர்களுடன் சேர்ந்து  அமைச்சர் ஒருவர்  இங்கு வந்து அதற்கான  ஒரு தீர்வை வழங்கிவிட்டு சென்றாரே தவிர அதற்கான நடவடிக்கையை இன்னும் மேற்கொள்ளவில்லை.

நேற்றைய தினம் கூட எங்களுடைய இளைஞர்களுடன் திரண்டு நாயாற்று பாலத்தடியில் நாங்கள் நின்றிருந்தோம் அந்த இளைஞர்கள் நின்ற நேரம் காணி அளவிட வந்திருந்தால் கட்டி வைத்திருப்போம் என்று சொல்லுகிறேன் ஏனென்றால் இது எங்களுடைய நிலங்கள்.

எங்களுடைய இடத்தை அபகரிக்க வேண்டும் என்று அரசாங்கத்தினுடைய தலைவர்கள் தயவு செய்து என்ன வேண்டாம் எங்களுடைய மண்ணை நாங்கள் காப்பதற்காகவே இப்படியான ஒரு போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.

ஆகவே தமிழர்கள் நாங்கள் இலங்கையின் பிரஜைகள் என்றால் எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள், எங்களை சீண்டிப் பார்க்காதீர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a comment