யாழிற்கு வரும் ஜனாதிபதி வலி.வடக்கு காணிகளை விடுவிப்பார்

380 0

vali_vadakku_landயாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகைதரும் போது வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்தில் இருந்து விடுவிப்பதற்கு இனங்காணப்பட்ட 800 ஏக்கர் காணிகளிலும் மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதற்கான முன்னாயர்த்த நடவடிக்கைகளும் அரச அதிகாரிகளினாலும், இராணுவத் தரப்பினாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக இனங்காணப்பட்ட பகுதிகல் உள்ள உயர்பாதுகாப்பு வலைய வேலிகளை பின்னகர்த்தும் இராணுவத்தினர், அங்குள்ள பற்றைக்காடுகளை அகற்றும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள மக்களுடைய உறுதிக் காணிகளில் ஒரு தொகுதி பகுதி பகுதியாக விடுவிக்கப்பட்டு வருகின்றது. இறுதியாக காங்கேசன்துறையில் நடேஸ்வராக் கல்லூரியினை உள்ளடக்கிய பகுதிகள் விடுவிக்கப்பட்டிருந்தன.
இருப்பினும் இறுதியாக விடுவிக்கப்பட்ட இடங்களில் இன்னமும் பொலிஸார் நிலை கொண்டுள்ளதால் அப்பகுதிகளில் பொது மக்கள் இன்னமும் முழுமையாக மீள்குடியேறிக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில் புதிதாக உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள 6 கிராம சேவகர் பிரிவுகளினை உள்ளடக்கிய 800 ஏக்கர் காணிகள் விடுவிப்பதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்திருந்தனர். .
இருப்பினும் விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்ட பகுதிகளில் குறிப்பாக பளைவீமன் காணம், நடேஸ்வரக் கல்லூரியினை அண்மித்த பகுதிகள் மற்றும் தல்சவென கோட்டல் பகுதிகளில் சுமார் 117.17 ஏக்கர் காணிகளிகளில் படைமுகாங்கள் அமைந்துள்ளது. மேலும் 225.8 ஏக்கரி சீமெந்து தொழிற்காலை காணிகளும் உள்ளன.
இந்நிலையில் விடுவிக்கப்படும் பகுதிகளில் மிகுதம் உள்ள 460 ஏக்கர் பகுதிகளே மக்கள் மீள்குடியேறிக் கொள்ளக் கூடியதாக உள்ளது. இவற்றிலும் அங்குள்ள படைமுகாங்களிற்காக பாதுகாப்பு தடைகள் அகற்றப்பட்டால் மட்டுமே முழுமையாக மக்கள் குடியேறிக் கொள்ளக் கூடிய நிலை ஏற்படுத்தப்படும்.
இருப்பினும் விடுவிக்கப்படும் தையிட்டிப் பகுதியில் மக்கள் அதிகளவில் குடியமரக் கூடிய வள்ளுவர் குடியிருப்பு போன்ற பகுதிகள் விடுவிக்கப்படுவதால் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து நல்புரி நிலையங்களில் வாழும் பெரும்பாலனவரகள் இங்கு மீள்குடியேறிக் கொள்ளக் கூடிய நிலை ஏற்படுத்தப்படும்
இந்நிலையில் புதிதாக விடுவிக்கப்படவுள்ள காணிகளின் உரிமையாளர்களிடத்தில் கையளிப்பதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்காக குறித்த காணிகளை துப்பரவு செய்து வீதிகளை அமைப்பதிலும், அங்குள்ள பாதுகாப்பு எல்லை வேலிகளை பின்னகர்த்தும் நடவடிக்கைகளும் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கு கொள்வதற்காக வருகைதருவுள்ளார்.
இதன்போது வலி.வடக்கில் விடுவிப்பதற்காக இனங்காணப்பட்ட காணிகளையும் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றதையும் அறியக் கூடியதக உள்ளது.