கிளிநொச்சி பளை புதுக்காட்டுச் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
இன்று காலை 5.35 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில், நால்வர் சம்பவ இடத்திலலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் 8 பேர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கிருந்து 5 பேர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி கொண்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், கிளிநொச்சியில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் குறித்த ஐவரில் மற்றுமொருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களில் வடமராட்சி புலோலி காந்தியூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 78 வயதுடைய எஸ்.பசுபதி, 75 வயதுடைய ப.பொன்னம்மா அவர்களுடைய 43 வயதுடைய மகன் ப.நந்தமூர்த்தி ஆகியோருடன், இறந்தவர்களின் உறவுப்பெண்ணான 55 வயது மதிக்கதக்க ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
வவுனியாவில் உறவினரின் மரணச்சடங்கு ஒன்றில் கலந்த விட்டு வடமராட்சி நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த வானும் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும், நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
சம்பவத்தில் ஹயஸ் வாகனம் பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் வானில் பயணித்த ஐவரே உயிரிழந்துள்ளனர்.
ஏ-9 வீதியில் இடம்பெற்ற கோர விபத்துக்களில் இவ்விபத்தும் ஒன்றாகப் பதிவாகியுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.
- Home
- முக்கிய செய்திகள்
- கிளிநொச்சியில் விபத்து – 5 பேர் பலி (காணொளி)
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
ரணிலின் கைதினூடாக அனுர அரசு உலகுக் கூறமுயல்வது என்ன?
August 27, 2025 -
சோவியத் எல்லைகளில் இருந்து “Trump பாதை” வரை-ஈழத்து நிலவன்.
August 9, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஈருருளிப்பயணம் – யேர்மனி
August 9, 2025 -
மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025 -
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி Frankfurt.
August 9, 2025 -
தமிழர் விளையாட்டு விழா 2025-பெல்சியம்
July 17, 2025