டென்மார்க் சிறீலங்காவிடம் மன்னிப்புக் கோரியுள்ளது

368 0

eelam1விசா விண்ணப்பிக்கக்கூடிய நாடுகளில் ஒன்றாக தமிழீழத்தை அங்கீகரித்தது தொடர்பாக டென்மார்க் சிறீலங்காவிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.குறித்த அங்கீகாரத்தை நீக்குவதாக டென்மார்க் உறுதியளித்துள்ளதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் உயர் மட்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விசா விண்ணப்பத்தை நிரப்பும் படிவத்திலுள்ள நாடுகள் தொடர்பான பிரிவில் தமிழீழமும் ஒன்றாக டென்மார்க் குடிவரவு திணைக்கள இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனையடுத்து சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய இந்த விடயம் டென்மார்க்கிலுள்ள சிறீலங்காத் தூதுவரூடாக டென்மார்க் அரசாங்கத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.

அவுஸ்திரேலிய சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மேற்கொண்ட இணையம் மூலமான சனத்தொகை கணக்கெடுப்பின் பிரகாரம் ஈழத்தை ஓர் நாடாக அவுஸ்திரேலியா அடையாளம் கண்டிருந்தது.இதன்தொடர்ச்சியாக தமிழீழத்தை ஒரு நாடாக டென்மார்க் அங்கீகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.