படை முகாம்கள் அகற்றப்பட்டால் மனிதப் புதைகுழிகள் வெளிவரும் – வீரவன்ச அச்சம்

338 0

625-500-560-350-160-300-053-800-900-160-90வன்னியிலுள்ள படை முகாம்கள் அகற்றப்பட்டால் அங்குள்ள மனிதப் புதைகுழிகள் வெளிவரும் அபாயம் இருப்பதாக கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமுன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அச்சம் வெளியிட்டுள்ளார்.

அவ்வாறான நிலை ஏற்பட்டால் இராணுவம் மீது போர் குற்றங்கள் சுமத்தப்பட்டு தண்டனை விதிக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமையைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மல்வது மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்கத் தேரர்களை சந்தித்த போதே விமல் வீரவன்ச இந்த விடையங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெனீவாவில் வைத்து இந்த அரசாங்கம் போர் குற்றங்களை விசாரணை செய்வதற்காக சர்வதேச நீதிபதிகள் வெளிநாட்டு வழக்குத் தொடுநர்கள் மற்றும் சட்டத்தரணிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்க இணக்கம் தெரிவித்திருக்கின்றது.

ஆனால் ஜனாதிபதி வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிப்பதில்லை என்று அறிவித்துள்ளார்.
இதற்கமைய ஜனாதிபதியின் விருப்பத்திற்கு அமைய இடம்பெறுமா அல்லது சர்வதேச சமூகத்தின்விருப்பத்திற்கு அமைய இடம்பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.