தமிழகத்தில் புதிதாக 10 கடலோர காவல் நிலையங்கள்

1733 248

rmslandதமிழகத்தில் இந்த வருடம் மேலதிகமாக 10 இடங்களில் கடலோரக் காவல் நிலையங்கள் திறக்கப்படும் என்று கடலோரப் பாதுகாப்பு அதிகாரி சி.சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று இதனை கூறினார்.
தமிழகத்தில் 12 கடலோரக் காவல் நிலையங்கள் இருந்தன.
கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக 20 காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, இந்த ஆண்டு புதிதாக 10 காவல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.
இதன்மூலம் 20 கிலோ மீட்டருக்கு ஒரு காவல் நிலையம் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment