யாழில் காணிகளை விடுவிக்க முடியாதென கட்டளைத் தளபதி தெரிவிக்கவில்லை-யாழ் இராணுவக் கட்டளைத் தலைமையகம் அறிக்கை

400 0

free-landயாழ்ப்பாணத்தில் படைகளின் வசமுள்ள 4 ஆயிரத்து 419 ஏக்கர் காணியை விடுவிக்க முடியாதென யாழ்ப்பாண கட்டளைத் தளபதி தெரிவிக்கவில்லை என யாழ்ப்பாண கட்டளைத் தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த 07 ஆம் திகதி கொழும்பில் இருந்து வருகை தந்த ஊடகவியலாளர் குழுவைச் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்ததாக ஆங்கிலப் பத்திரிகை மூலம் வெளிவந்த செய்தியை குடாநாட்டுப் பத்திரிகைகளும் வெளியிட்டுள்ளதாக யாழ்ப்பாண கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இருந்து வருகை தந்த ஊடகவியலாளர் குழுவைச் சந்தித்தபோது படைகளின் வசமுள்ள 4 ஆயிரத்து 419 ஏக்கர் நிலப்பரப்பில், இராணுவ முகாம்களை சுருங்கச் செய்து மக்களின் காணிகளில் இணைந்த குடியிருப்புக்கு ஏற்ப நிலங்கள் விடுவிக்கப்பட இருப்பதாக யாழ்ப்பாண கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இம்மாத இறுதியளவில் மயிலிட்டியை அண்டிய பகுதிகளில் இராணுவ முகாமுடன் இணைந்த குடியிருப்புகளை அமைப்பதற்கேற்ப காணிகள் விடுவிக்கப்பட இருப்பதாகவும் அறிக்கையயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 27 ஆயிரத்து 259 ஏக்கர் நிலப்பரப்பு இராணுவத்தின் குடியிருப்பு கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் 21 ஆயிரத்து 134 ஏக்கர் நிலம் உரிமையாளர்களுக்கு 11 தடவைகள் 2010இல் இருந்து கையளிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆமி குடியிருப்புக்கள் இருந்த 11 ஆயிரத்து 269 ஏக்கரில் 7 ஆயிரத்து 210 ஏக்கர் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது 2.15 வீதம் நிலமே இராணுவத்திடம் இருப்பதாகவும் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.