இரணைமடுக்குளத்திற்கு வடக்கு முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் விஜயம் (காணொளி)

451 0

img072கிளிநொச்சி  இரணைமடுக்குளத்திற்கு விஜயம் செய்த வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் குளத்தின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டதுடன், அதன் நிலைமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளனர்.

வடமாகாணத்தின் பிரதான நீர்த்தேக்கமாகவும்,  கிளிநொச்சி மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாகவும் அமைந்துள்ள  இரணைமடுக்குளத்தின் புனரமைப்பு பணிகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொள்ளப்படாத நிலையில்,  தற்போது ஆசிய அபிவிருத்தி வங்கியின்  நிதியுதவியுடன் சுமார் இரண்டாயிரம் மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாண்டுக்கான சிறுபோக செய்கைகள் யாவும் முழுமையாக நிறுத்தப்பட்டு இதன் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், குளத்தின் அணைக்கட்டுப் புனரமைப்புக்குரிய மண்ணைப்  பெற்றுக்கொள்வதில் பல்வேறு நெருக்கடிகள் காணப்பட்டதுடன், மண்ணைப் பெற்றுக்கொள்ள முடியாமல் குளத்தின் புனரமைப்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இதனால் குளத்தின் புனரமைப்புபணிகளில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.

தற்போது குளத்தின் புனரமைப்பு பணிகள் தொடர்பிலும் அதன் தற்போதைய நிலமைகள் தொடர்பிலும் வடமாகாண முதலமைச்சர்  சி.வி.விக்கினேஸ்வரன், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உள்ளிட்டோர் குளத்தின் தற்போதைய நிலமைகள் தொடர்பில் இன்று  குளத்திற்குச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டதுடன்,  அப்பகுதி விவசாயிகளுடனும் கலந்துரையாடியுள்ளனர்.