ஓமந்தையில் கோர விபத்தில் சிக்கிய பேருந்துகள்!

304 0

தனியார் பேருந்து சடுதியாக நிறுத்தப்பட்டதை அடுத்து, அதன்பின்புறம் வேகமாக வந்துகொண்டிந்த இ.போ.ச. பேருந்து வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாது மோதி விபத்துக்குள்ளானது

புளியங்குளத்துக்கும், ஓமந்தைக்கும் இடையே இன்று பிற்பகல் நடந்த பேருந்து விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வவுனியா பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் பேருந்தும், இ.போ.ச. பேருந்துமே விபத்துக்குள்ளாகியுள்ளன. தனியார் பேருந்து சடுதியாக நிறுத்தப்பட்டதை அடுத்து, அதன்பின்புறம் வேகமாக வந்துகொண்டிந்த இ.போ.ச. பேருந்து வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாது மோதி விபத்துக்குள்ளானது என்று கூறப்படுகின்றது.

Leave a comment