9ஆவது முள்ளிவாய்க்கால் தமிழின பேரவல நினைவேந்தல் ஏற்பாடுகள் பூர்த்தி!!

316 0

9ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழின பேரவல நினைவேந்தல் நிகழ்வுகள் நாளையத்தினம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் யாவும் சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கபட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தலைமையில் நாளைய தினம் இந் நினைவேந்தல் நிகழ்வு வெள்ளா – முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள பொது தூபியில் நடைபெற உள்ளது.

காலை 11 மணிக்கு பொது சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

கடந்த வருடங்களில் முள்ளிவாய்க்காலில் பல இடங்களில் பல அமைப்புகள் கட்சிகளால் பிரிந்து நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில் இவ் வருடம் யாழ் பல்கலைகழக மாணவர்களின் முயற்சியால் அனைவரும் ஓரணியில் இணைந்து ஒரே இடத்தில்  நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

Leave a comment