முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வடக்கு கிழக்கில் விஸ்தரிக்க வேண்டும்

25554 0

தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் மாத்திரம் சுருக்கி விடாது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விஸ்தரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு, சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் ஊடக சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட ஒன்றியத்தின் செயலாளர் பிலிப்பையா ஜோன்ஸன், சிங்கள மக்களால் ஆட்சிக்கு கொண்டு வரப்பட்டவர்களாலேயே, அவர்களுக்கு எதிரான கொலைகள் இடம்பெற்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை அரசியல் நோக்கத்திற்காக தமிழ் தலைமைகள் நடத்துவதாகவும் இந்தச் சந்திப்பில் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன், ஜே.வி.பி புரட்சியில் தமது இனம் கொல்லப்பட்ட போது, மௌனமாக இருந்த சிங்களவர்களே, தமிழ் மக்கள் அழிக்கப்பட்ட போதும் மௌனமாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

Leave a comment