மஹிந்தவின் ஆட்சியில் நிதி மோசடி – மற்றுமொரு அதிகாரி தேடப்படுகிறார்

306 0

625-500-560-350-160-300-053-800-900-160-90ஜனாதிபதி அலுவலக சபையின் முன்னாள் நிர்வாக பணிப்பாளரான ஏ.எம்.பீ.அபேசிங்க 18 காசோலைகள் ஊடாக 218மில்லியன் பணத்தினை பெற்றுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிவந்துள்ளன.

குறித்த அதிகாரி 12 நிறுவனங்கள் மற்றும் ஒரு தனிநபருடைய காசோலைகளை மாற்றியுள்ளதாகவும், இவர் தற்போது தேடப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கொடுக்கல் வாங்கள் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அலுவலக சபையின் பிரதானியாக கடமையாற்றியவர் காமினி செனரத் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசோலை மாற்றிய விவகாரத்துடன் தொடர்புடைய நபர் காமினி செனரத்தின் கீழ் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிகாரியை நிர்வாக அதிகாரியாக நியமித்தவர் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க என்றும் 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி இவருக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகாரி அதிகமாக சேவையாற்றியுள்ளது பிரதமரின் அலரிமாளிகையில் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.