பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, நிலைமாறு காலகட்ட நீதிப்பொறிமுறை ஆனது ஒரு அனைத்துலக ஏமாற்று நாடகம்!

5743 25

VCC-FSHKFDRசிறீலங்கா அரசின் மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் – படுகொலைகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, ‘நிலைமாறு காலகட்ட நீதிப்பொறிமுறை’ ஆனது ஒரு அனைத்துலக ஏமாற்று நாடகம் என்று பகிரங்கப்படுத்தி, வவுனியாவில் நாளை (25.06.2016) காலை 11.00 மணிக்கு கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் (Forum for Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives – Tamil Homeland) தன்முனைப்புடனும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒத்துழைப்புடனும் குறித்த கவனவீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக FSHKFDR-Tamil Homeland இன் தலைவி திருமதி ஆஷா நாகேந்திரனும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் திரு.கோ.ராஜ்குமாரும் கூட்டாக அறிவித்துள்ளனர்.

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா மாவட்ட சங்கத்தலைவி (FSHKFDR-Vavuniya District) திருமதி கா.ஜெயவனிதா தலைமையில், வவுனியா மத்திய பேருந்து நிலையம் முன்பாக நாளை (25.06.2016) காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ள குறித்த கவனவீர்ப்பு போராட்டத்தில், சிறீலங்கா அரசின் ஆட்கடத்தல் மற்றும் தடுத்து வைத்தல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களும், இந்தக் குடும்பங்களின் நலன்களில் அக்கறையுடையவர்களும் கலந்துகொள்வர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Leave a comment