கிழக்கு கூட்டாவுக்கு 40 ஆயிரம் மக்கள் திரும்பினர்!

1333 0

டமாஸ்கஸ் நகரில் போர் காரணமாக கிளர்ச்சியாளர்கள் வெளியேறியதால் உள்ளூர் மக்கள் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கிழக்கு கூட்டாவுக்கு திரும்பினா்.

சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரை அடுத்து அமைந்து உள்ள கிழக்கு கூட்டாதான், கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்து வந்த கடைசி முக்கியப் பகுதி ஆகும்.

அதை மீட்பதற்காக அதிபர் பஷார் அல் ஆசாத் படைகள் கடந்த 2 மாதங்களாக கடுமையாக சண்டையிட்டன. இதில் கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த இடங்களில் 95 சதவீத இடங்களை அதிபர் படைகள் மீட்டு விட்டன. இந்தப் போரில் ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அந்தப் பகுதியின் கடைசி இடமான டூமாவில் இருந்து கிளர்ச்சியாளர்களை பின்வாங்கச்செய்வதற்கு, அரசுக்கும், அவர்களுக்கும் இடையே ரஷியா சமரசம் செய்து வைத்தது.

அதன் பலனாக அங்கு இருந்து 24 மணி நேரத்தில் ஆயிரத்து 123 கிளர்ச்சியாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் வெளியேறினர். இதுவரை அங்கு இருந்து 2 ஆயிரத்து 269 கிளர்ச்சியாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் வெளியேறி உள்ளனர். இந்த நிலையில் போர் காரணமாக அங்கு இருந்து வெளியேறிய உள்ளூர் மக்கள் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கிழக்கு கூட்டாவுக்கு திரும்பி உள்ளனர்.

இந்த தகவலை ரஷிய ராணுவ அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

Leave a comment