அமெரிக்க ராணுவ விமானம் ஈராக்கில் விழுந்து நொறுங்கியது

229 0

ஈராக்கின் அல்-காம் பகுதியில் அமெரிக்க ராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் பயணித்த ஏழு பேரின் நிலை குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ரியா – ஈராக் எல்லையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்க கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் பல ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் ராணுவ விமானம் ஒன்று ஈராக் நாட்டின் மேற்கில் உள்ள அல்-காம் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த ஏழு பேரின் நிலைமை குறித்த கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து அங்கு சென்ற மீட்புப்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a comment