பிரிட்டிஷ் பவுண்ஸ்சின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

641 0

201606241002339011_Pound-tumbles-to-low-against-US-dollar_SECVPFவாக்கெடுப்பு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக நேற்று அமெரிக்க டாலருக்கு நிகரான பவுண்ஸ்சின்  விலை சர்வதேச சந்தையில் 1.5 டாலராக உயர்ந்திருந்தது.  இன்று முடிவுகள் வெளியாகத் தொடங்கி ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என்பதை ஆதரிக்கும் வாக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளது தெரியவந்த நிலையில், இந்த மதிப்பு 9 சதவீதம் சரிவடைந்து, 1.3459 டாலராக மாறியது.

கடந்த 1985-ம் ஆண்டுக்கு பின்னர் பிரிட்டிஷ் பவுண்ட் இவ்வளவு பெரிய வீழ்ச்சியை சந்திப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டனில் கடந்த 2008-ம் ஆண்டு ஏற்பட்ட நிதிநெருக்கடி காலத்தில் சந்தித்ததைவிட தற்போது பிரிட்டன் நாணயமான பவுண்ட் கடும் சரிவை சந்தித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். நாணய மதிப்பு சரிவை தொடர்ந்து பிரிட்டனில் மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்திக்க நேரிடும் எனவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Leave a comment