மியான்மரில் ரோஹிங்கியா போராளிகள் மீண்டும் தாக்குதல்

350 0

மியான்மர் நாட்டில் ராணுவ வாகனம் மீது ரோஹிங்கியா போராளிகள் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 3 பேர் காயமடைந்துள்ளனர்.

மியான்மர் நாட்டில் ராணுவ ஒடுக்குமுறைக்கு பயந்து சுமார் 4 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இதேபோல், இந்தியாவில் சுமார் 14 ஆயிரம் ரோஹிங்கியா அகதிகள் தங்கியுள்ளனர்.
ரோஹிங்கியா போராளிகளை மீண்டும் அங்கு குடியமர்த்துவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், மியான்மர் நாட்டின் ராக்கின் மாகாணத்தில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனத்தின் மீது இன்று ரோஹிங்கியா போராளிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 2 வீரர்கள் உள்பட மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரோஹிங்கியா போராளிகளை மீண்டும் குடியமர்த்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவர்கள் இதுபோன்ற தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment