சிறப்புற நடைபெற்ற ஒதியமலை படுகொலையின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

6654 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமமான ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 அதிகாலை வேளையில் இராணுவம் சந்திப்புக்கென அழைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி பொதுமக்களின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (02) காலை 1 0 மணிக்கு ஒதியமலை படுகொலை நடைபெற்ற இடத்தில் ஒதியமலை கிராம அபிவிருத்தி சங்க ஏற்பாட்டில் நடைபெற்றது

இதன்போது படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி பொதுமக்களுக்கு உறவுகளால் சுடரேற்றி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது இதனை தொடர்ந்து ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் ஆத்மா சாந்தி பிரார்த்தனைகளும் அன்னதானமும் இடம்பெற்றது

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா வடமாகாண சபை பிரதி அவை தலைவர் வ கமலேஸ்வரன் முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சரும் தற்போது மாகாண சபை உறுப்பினருமான ப சத்தியலிங்கம் வடமாகாண சபை உறுப்பினர் து ரவிகரன் உள்ளிட்ட அதிதிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a comment