தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக மகஜர் கையளிப்பு

10666 213

3HjDJupaநீண்டகாலமாக சிறையில் வாடும் தமிழ்க் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்தில் மகஜர் ஒன்று கையளிக்க ப்படவுள்ளது. அரசியல் கைதிகளுக்கான தேசிய இயக்கம் இந்த மகஜரை இன்று கையளிக்கவுள்ளதாக இதன் இணைப்பாளர் சுந்தரம் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் தொடர்பாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்ற சட்டமா அதிபர் திணைக்கள உயரதிகாரிகளின் வாக்குறுதியையடுத்து கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டிருந்தனர். எனினும் இதுவரை எந்தவிதமான குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையிலேயே, இன்றைய தினம் ஐநா அலுவலகத்தில் கைதிகள் தொடர்பான மகஜர் ஒன்றைக் கையளிக்கவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

Leave a comment