அமெரிக்க தூதரக அரசியல் நிபுணர் குழு: யாழ். அரசஅதிபர் சந்திப்பு

6032 39

usa kuluயாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அமெரிக்க தூதுதரகத்தின் அரசியல் நிபுணர் நஸ்ரேன் மரிக்கர் அடங்கிய குழுவினர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் காணப்படும் வேலைவாய்ப்பின்மையை இல்லாதொழிப்பதற்கான செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

முக்கியமாக யாழ் மாவட்டத்தில் காணப்படும் வேலைவாய்ப்பின்மை மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதில் உள்ள சவால்கள் தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் குறித்த குழுவினர் கேட்டறிந்து கொண்டனர்.

Leave a comment