நாட்டின் பொறுப்பு ஜே.வி.பியினக்கு மட்டும்- அனுரகுமார திசாநாயக்க

Posted by - October 29, 2017

நாட்டை முன்நோக்கி கொண்டு செல்வதற்கான பொறுப்பு ஜேவிபியினருக்கு மட்டுமே உள்ளதாக ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார். எதிர் கட்சிகள் பலவீனமடைந்துள்ளன. எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பலவீனமடைந்துள்ளன. அவர்களின் கொள்கைகள் முறையானதாக இல்லை இந்த நிலையில் இலங்கையின் எதிர்காலம் குறித்த பொறுப்பு தமது கட்சிக்கு பொறுப்பாகியுள்ளதாக அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தில் 4 பேர் பலி

Posted by - October 29, 2017

கொஸ்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற 3 துப்பாக்கி பிரயோ கத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை இவ்வாறு துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. எக் காரணத்திற்காக இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து இது வரையில் அறியப்படவில்லை. இதன்போது 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்பெயினின் இறையாண்மை, ஒருமைப்பாட்டிற்கு இலங்கை முழு ஆதரவு 

Posted by - October 28, 2017

கேட்டலோனியா, ஸ்பெயினுக்கு சொந்தமான ஒரு பகுதி என்பதே தமது நிலைப்பாடு என இலங்கை அறிவித்துள்ளது. கேட்டலோனிய பிராந்திய சட்டமன்ற சுயாட்சி தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்பெயினின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு இலங்கை முழு ஆதரவையும் வழங்குவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினுக்கும் இலங்கைக்கும் நீண்ட காலமாக சிறந்த இராஜதந்திர உறவு நிலவுவதாக சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார அமைச்சு, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு முக்கிய உறுப்பு நாடாக ஸ்பெயின் விளங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியா பதில் பிரதமர்- ஜூலி பிஷப் 

Posted by - October 28, 2017

அவுஸ்திரேலிய லிபரல் கட்சியின் உபதலைவரும் வௌிவிவகார அமைச்சருமான ஜூலி பிஷப் பதில் பிரதமராக செயற்படவுள்ளார். அவுஸ்திரேலிய பிரதமர் Malcolm Turnbull இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில்,ஜூலி பிஷப் குறித்த காலப் பகுதியில் பதில் பிரதமராக செயற்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இரட்டை குடியுரிமை கொண்டுள்ள துணை பிரதமர் Barnaby Joyce உள்ளிட்ட நான்கு அரசியல்வாதிகள் தவறாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உயர் நீதிமன்றம் ஒன்று நேற்று (27) உத்தரவு பிறப்பித்தது. அவுஸ்திரேலியாவின் அரசியலமைப்புச் சட்டப்படி, இரட்டை குடியுரிமை கொண்டுள்ளவர்கள்

பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த பெண் கைது

Posted by - October 28, 2017

சிலாபம், மாதம்பை பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்துவந்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிடைத்த தகவலுக்கு அமைய முச்சக்கரவண்டியொன்றை சோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் 30 வயதான பெண் ஒருவரையும் முச்சக்கரவண்டி சாரதியையும் கைது செய்துள்ளனர். இதன்போது குறித்த பெண்ணிடமிருந்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த பெண் வழங்கிய தகவலுக்கமைய, இன்று இரண்டாவது சுற்றிவளைப்பை பொலிஸார் மேற்கொண்டனர். அவர் தற்காலிகமாக வசித்துவந்த மாதம்பேயிலுள்ள வீட்டில் மறைத்து

திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

Posted by - October 28, 2017

வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மக்கள் அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

நாளை முதல் சாகும் வரையிலான உணவுதவிர்ப்பு போராட்டம்

Posted by - October 28, 2017

சைட்டம் விவகாரத்திற்கு முடிவு இல்லையெனில் நாளை முதல் சாகும் வரையிலான உணவுதவிர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்வதாக அரச பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர்கள் இதனை தெரிவித்தனர். சைட்டம் நிறுவனத்தை, மாலபே ஸ்ரீலங்கா தகவல் தொழிநுட்ப நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான யோசனையொன்று அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சைட்டம் நிறுவனத்தை ஸ்ரீலங்கா தகவல் தொழிநுட்ப பிரிவில் இணைத்து அதன் ஒரு பீடமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரியாலையில் இளைஞன் சுட்டுக்கொலை: விசாரணைகளில் திடீர்த் திருப்பம்

Posted by - October 28, 2017

யாழ்ப்பாணம், அரியாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழான குழு உள்ளிட்ட பொலிஸ் குழுக்களால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை இடைநிறுத்துமாறு கொழும்பு பொலிஸ் தலையகத்திலிருந்து பணிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 6 நாள்களாக முன்னெடுத்த தீவிர விசாரணைகளால் சந்தேகநபர்களை நெருங்கிவிட்ட நிலையிலேயே இந்தப் பணிப்புரையை பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படை முகாமை சோதனையிட நீதிமன்ற

ஹல்துமுல்ல, கொஸ்லந்த பிரதேசத்தில் மண் சரிவு எச்சரிக்கை

Posted by - October 28, 2017

ஹல்துமுல்ல, கொஸ்லந்த பிரதேசத்திற்கு கடந்த 6 மணித்தியாலத்துக்குள் பெய்த 125 மி.மி. மழை வீழ்ச்சியினால் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதனால், அப்பிரதேசத்திலுள்ள ஆறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் நிலையம் மேலும் கூறியுள்ளது. இந்த அடை மழையினால் அப்பிரதேசங்களின் சுவர்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், சில இடங்களில் குழிகள் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பிரதேச செயலாளர் சுனில் அபேகோன் தெரிவித்துள்ளார்.

அரியாலையில 5 பேர் விசம் குடித்து சாகக் காரணமான கொடூரக் குடும்பம்  -வெளியானது ஒளிப்படம்

Posted by - October 28, 2017

நம்பிக்கைத் துரோகத்தால் பல இராட்சியங்கள் வீழ்ந்த வரலாறு பல உண்டு. நம்ம இனமே நம்பிக்கைத் துரோகத்தாலேயே இந்த நிலையில் உள்ளது. நம்பிக்கை வைத்துப் பழகும் அயலவர்களும் அறிந்தவர்களும் நண்பர்களும் செய்த துரோகத்தால் தமிழ் இனம் முள்ளி வாய்கால் கொலைக்களம் வரை சென்று வந்த வரலாறு யாவரும் அறிந்ததே. கிட்டு உட்பட பலர் கப்பலுடன் கடலுகுள் தற்கொலை செய்ததும் நம்பிக்கைத் துரோகத்தாலும் காட்டிக் கொடுப்பாலுமே. அந்த கிட்டுவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அமைக்கப்பட்ட கிட்டு பூங்காவுக்கு சற்றுத் தொலைவில் வாழ்ந்து