இணைக்கப்பட்ட வடகிழக்கிலேயே புதிய தீர்வுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்-சிவில் சமூக அமைப்புகள்
இணைக்கப்பட்ட வடகிழக்கிலேயே புதிய தீர்வுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும், வடகிழக்கு இணைப்பு இல்லாத எந்த தீர்வுத் திட்டத்தினையும் ஏற்பதற்கான ஆணையை அரசியல்வாதிகளுக்கு வழங்கவில்லையென, கிழக்கு மாகாணத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. அத்துடன், வடகிழக்கு இணைப்பினை உறுதிப்படுத்த வேண்டிய தார்மீக பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளதாகவும் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் உள்ள சிவில் அமைப்புகள் இணைந்து முதன்முறையாக இந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. மட்டக்களப்பு புகையிரத வீதியில் உள்ள அரசசார்பற்ற அமைப்புகளின் ஒன்றியமான இணையம் காரியாலயத்தில்

