நிலவும் காலநிலையால் சிறுமி பரிதாப மரணம்

Posted by - October 30, 2017

பேராதனை – கலஹா வீதியில் மஹகந்த ஹல்ஒயா பிரதேசத்தில் வீடொன்றின் மீது கல் ஒன்று சரிந்து வீழ்ந்ததன் காரணமாக சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். மேலும் அவரது பாட்டி காயமடைந்து பேராதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவும் மழையுடனான காலநிலையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், டீ.எம்.உதாரி சேஹாரா என்ற 7 வயதான சிறுமியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இவர் தரம் இரண்டில் கல்வி கற்று வந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் (28) இரவு 8.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஏறாவூர் இரட்டை படுகொலை , பிரதான சூத்திரதாரி கைது

Posted by - October 30, 2017

மட்டக்களப்பு ஏறாவூர் இரட்டைப் படுகொலையின் பிரதான சூத்திரதாரியென சந்தேகிக்கப்படும் முல்லைத்தீவைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 18 ஆம் திகதி தீபாவளி தினத்தன்று ஏறாவூர் சவுக்கடி முருகன் கோவில் வீதியிலுள்ள வீட்டில் இருந்து 26 வயதுடைய தாயும் 11 வயதுடைய மகனும் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர். இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் சந்தேகத்தில் மூவரை கைதுசெய்து விசாரணைகளுக்குட்படுத்தியதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க யுத்தக்கப்பல்கள் நாட்டுக்கு வருவது பாரிய அச்சுறுத்தல்.!

Posted by - October 30, 2017

அமெரிக்க யுத்தக்கப்பல்கள் நாட்டுக்கு வருவது பாரிய அச்சுறுத்தலாகும். அரசாங்கம் இது தொடர்பாக அமெரிக்காவுடன் செய்துகொண்டுள்ள இரகசிய ஒப்பந்தத்தை நாட்டுக்கு வெளிப்படுத்தவேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியாவுடன் பேச்சுவாரத்தை குறித்து மனம் திறந்தார் ரணில்.!

Posted by - October 30, 2017

திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவிற்கு வழங்கும் எந்தவித உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை. எண்ணெய்க் குதங்கள் குறித்து மட்டுமே இந்தியாவுடன் பேச்சுவாரத்தை நடத்தப்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வங்காளவிரிகுடா நாடுகள் வளர்ச்சிகானாது திருகோணமலை வளர்ச்சியடையாது, எனினும் இந்தியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகள் திருகோணமலை துறைமுகம் குறித்து  ஆலோசித்துவருவதாகவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது திருகோணமலை துறைமுக திட்டங்கள் குறித்த கேள்விக்கு பதில் கூறுகையில் அவர் இதனைக்

அவுஸ்திரேலிய பிரதமர் இலங்கை விஜயம்

Posted by - October 30, 2017

அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டன்புல் எதிர்வரும் நவம்பர் 2ம் திகதி இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அவரது குறித்த விஜயத்தில் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்த உள்ளார். இதேவேளை, இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கிடையில் இருதரப்பு தொடர்புகள் ஏற்பட்டு 70 வருடங்கள் பூர்த்தியடையும் நிலையில் தான் இலங்கைக்கு வருவதில் மகிழ்ச்சியடைவதாக அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டன்புல் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வருடம் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் அவுஸ்திரேலிய விஜயத்தின்

சீனியை குறைப்பதற்கு புதிய வரி

Posted by - October 30, 2017

குளிர்பானங்களில் சீனியின் அளவை குறைப்பதற்கு புதிய வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சீனி பாவனையை குறைப்பதற்காக குளிர்பானங்களில் 06 கிராமுக்கு அதிகமாக சீனி இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு கிராமுக்கும் ஒரு ரூபா வரி அறவிடப்படும் எனவும் இதற்கு உலக சுசுகாதார அமைப்பின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நடைபெற்ற தாதியர் டிப்ளோமா பயிற்சிநெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டார். இதேவேளை, உயிரிழப்பவர்களில்

டான் பிரியசாத் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - October 30, 2017

கல்கிஸ்ஸையில் மியன்மார் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு முன்னாள் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள டேன் பிரியசாத் மற்றும் பிரகீத் சானக ஆகியோரை எதிர்வரும் நவம்பர் மாதம் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ள அரபேபொல ரத்னசார தேரர் எதிர்வரும் நவம்பர் மாதம் 13ம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு முன்னிறுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போதையில் விழுந்திருந்த அமெரிக்க கடற்படை வீரர் பொலிஸாரால் மீட்பு

Posted by - October 30, 2017

அதிக போதை காரணமாக கொள்ளுப்பிட்டிய பிரதேசத்தில் வீடொன்றுக்கு முன்னால் விழுந்திருந்த அமெரிக்க கடற்படை வீரரொருவரை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவிலிருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த யுத்த கப்பலில் பணிபுரியும் குறித்த ஊழியர் நேற்று கொள்ளுப்பிட்டிய பிரதேசத்தை பார்வையிடச் சென்றவேளை அதிகமாக மதுவருந்தியதால் போதை அதிகரித்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பின்னர், குறித்த வீரரை பொலிஸார் அமெரிக்க தூதுவராலயத்தின் ஊடாக கடற்படையினரிடம் ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது.

திவுலப்பிட்டிய அமைப்பாளர் பதவியில் இருந்து ரஞ்சன் நீக்கம்

Posted by - October 30, 2017

ஐக்கிய தேசிய கட்சியின் திவுலப்பிட்டிய தொகுதி அமைப்பாளரான பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். குறித்த வெற்றிடத்துக்கு முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கித்சிறி மஞ்சநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக நீதிமறத்தை அவமதித்தமை தொடர்பில் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கும் படி மாகல்கந்தே சுதத்த தேரரினால் உச்ச நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக முதுநிலை பட்டப் படிப்பு தேர்வை எழுதும் மரண தண்டனை கைதி

Posted by - October 30, 2017

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக மரண தண்டனை கைதியொருவர் பல்கலைக்கழக முதுநிலை உயர் பட்டப்படிப்பு தேர்வு ஒன்றில் கலந்துகொள்ள உள்ளதாகச் சிறைச்சாலையின் தலைமை அதிகாரி சந்தன எக்கனாயக்க தெரிவித்துள்ளார். துணை பொலிஸ் பரிசோதகராக பணியாற்றிய இந்திக்க பமுனுசிங்க எனும் இக்கைதி தனது தேர்வுப் பரீட்சையினை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை சிறப்பு நிலையமொன்றில் எழுதவுள்ளதாக சிறைச்சாலையின் தலைமை அதிகாரி ஊடகங்களுக்குத் தெரிவித்தார். சிறையிலிருந்தே களனி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தை பெற்றுக் கொண்ட குறித்த கைதி, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில்