போலி விசாவை பயன்படுத்தி தப்பிச் செல்ல முற்பட்டவர் கைது

Posted by - October 31, 2017

போலி விசாவை பயன்படுத்தி நாட்டில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்ட நான்கு பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. மினுவாங்கொட மாவட்ட நீதிமன்றம் நேற்று அவர்களுக்கு பிணை வழங்கியது. இவர்கள் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தின் ஊடாக இத்தாலி மற்றும் ஜெர்மனுக்கு செல்ல முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் 10 ஆயிரம் ரூபா வீதம் ரொக்க பிணையிலும் ஒரு லட்சம் ரூபா சரீர பிணைகள் இரண்டிலும் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் பருத்தித்துறை, திருகோணமலை

காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு பகிரப்பட மாட்டாது- அரசாங்கம்

Posted by - October 31, 2017

புதிய அரசியல் யாப்பின் கீழ் காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு பகிரப்பட மாட்டாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசியல் யாப்பு தொடர்பான வழிநடத்தற்குழுவின் இடைக்கால அறிக்கை மீதான அரசியலமைப்பு பேரவை விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார். காணி அதிகாரம் முழுமையாக காணி ஆணைக்குழுவிற்கே வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். அதேநேரம் காவற்துறை அதிகாரம் என்பது முழுமையாக காவற்துறை ஆணைக்குழுவிற்கு பாரப்படுத்தப்படும். எனினும் மாகாணத்துக்கு பொறுப்பான காவற்துறையை கட்டுப்படுத்துவதற்கான சில அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு

மானஸ் தீவு ஏதிலிகள் முகாமில் இலங்கை ஏதிலிகள் நிர்கதி

Posted by - October 31, 2017

பப்புவா நியுகினிக்கு சொந்தமான மானஸ் தீவு ஏதிலிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஏதிலிகள் பலர் நிர்கதியாக்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. படகு மூலம் அவுஸ்திரேலியா செல்கின்றவர்கள் நீண்டகாலமாக இந்த முகாமில் தடுத்து வைக்கப்படுகின்றனர். எனினும் குறித்த முகாம் சட்டவிரோதமானது என்பதால், அதனை மூடுமாறு பப்புவா நியுகினியின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் படி இன்றுடன் மூடப்படவுள்ளது. ஆனால் அங்குள்ள ஏதிலிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று

ஐரோப்பிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு இலங்கை விஜயம்

Posted by - October 31, 2017

ஐரோப்பிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவொன்று இன்றையதினம் இலங்கை வரவுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் வனஜின் லெம்பட் தலைமையிலான குறித்த குழுவில் ரிச்சட் கோபட் உல்ரிகோ முலர் மற்றும் வஜிட் கான்  ஆகியோர் அடங்குகின்றனர். ஐரோப்பா வழங்கும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்கு நிகராக இலங்கையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் ஆராயும் முகமாகவே அந்த குழு இலங்கை வரவுள்ளது. குறித்த உறுப்பினர்கள் எதிர்வரும் மூன்றாம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த குழுவின்

பிளவடைந்த வாதங்களினால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது- ஜனாதிபதி

Posted by - October 31, 2017

பிளவடைந்து வாதங்களை நடத்துவதன் மூலம் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசியல் யாப்பு தொடர்பில் பிரிந்திருந்து தனித்தனியே விவாதங்களை நடத்துவதன் ஊடாக இந்த பிரச்சினைக்கு தீர்வைக் காண வாய்ப்புகள் இல்லை. எனவே இதற்கான அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி, தேவையான திருத்தங்களை முன்வைப்பதற்காக மூன்று பேரவைகள் உருவாக்கப்படவுள்ளன. நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்காகவும்,

ஐரோப்பாவை தாக்கிய சூறாவளி

Posted by - October 30, 2017

மத்திய மற்றும் வட ஐரோப்பாவை தாக்கிய பாரிய சூறாவளி காரணமாக குறைந்தது 6 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் ஜெர்மனி, போலந்து மற்றும் செக் குடியரசு நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செக் குடியரசின் அதி உயர் மலைப்பிரதேசத்தில் இந்த சூறாவளியின் வேகம் மணிக்கு 112 மைல் வேகத்தில் வீசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சூறாவளி காரணமாக போலந்து மற்றும் செக்குடியரசு நாடுகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புக்கள் மின்சார விநியோகம் இன்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேமன் தொடரூந்து தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளமையால், தொடரூந்து சேவைகள்

நுவரேலியா பாடசாலையில் தீ

Posted by - October 30, 2017

நுவரெலியா கந்தப்பளை கோட்லோஜ் தமிழ் வித்தியாலயத்தில் மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் வித்தியாலயத்தின் தஸ்தாவேஜி களஞ்சிய அறை முற்றாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனால் அறையில் களஞ்சியபடுத்தபட்டிருந்த முக்கியமான ஆவணங்கள் சில பாதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை மத்திய மகாண சபை உறுப்பினர் ஆர.இராஜாராம் நேரில் சென்று பார்வையிட்டு பாடசாலை நிர்வாகத்துடன் கலந்துறையாடியுள்ள நிலையில், சம்பவம் குறித்து நுவரெலியா கல்வி திணைகளத்துடன் தொடர்பு கொண்டு இதனை திருத்தி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வட மாகாணம் உள்ளிட்ட 8 மாகாண மக்களுக்கான எச்சரிக்கை

Posted by - October 30, 2017

நாட்டை சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலையின் காரணமாக, நாளையதினம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை அவதான நிலையம் அறிக்கையொன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கடும் மழைப் பெய்யக்கூடும். குறித்த பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழச்சி பதிவாகக்கூடும் என வானிலை அவதான நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்

புதிய அரசியல் யாப்பு  அறிக்கை- அமரபுர மஹாபீடம் 

Posted by - October 30, 2017

புதிய அரசியல் யாப்பு உருவாக்குவதை தவிர்த்து, தற்போதுள்ள அரசியல்யாப்பில் தேவையான திருத்தங்களை மாத்திரம் மேற்கொள்ளுமாறு, இலங்கை அமரபுர மஹாபீடம் ஜனாதிபதி மற்றும் பிரதமரை கோரியுள்ளது. அதன் உயர்பீட மஹாநாயக்கர், வணக்கத்துக்குரிய கொடுகொட தம்மாவாச தேரரின் கையொப்பத்துடன், வெளியிடப்பட்டுள்ள  அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பௌத்த மதம் மற்றும் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதிக்கும் வகையிலான சரத்துகள், புதிய அரசியல் யாப்பு தொடர்பான வழிநடத்தற்குழுவின் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமரபுர மஹாபீடத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களை

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 18 ஆவது சிரார்த்த தினம்

Posted by - October 30, 2017

இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமையை உறுதிப்படுத்திய மலையகத்தின் சிரேஷ்ட தலைவரான, மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் 18 ஆவது சிரார்த்த தினம் இன்றாகும். சிரார்த்த தின நிகழ்வுகள் பழைய பாராளுமன்றக் கட்டடத் தொகுதி முன்றலில் இன்று காலை நடைபெற்றன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகம் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம், கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்