உலக பௌத்த மாநாட்டில் பங்கேற்க இலங்கை வந்துள்ள பிரதிநிதிகள்

Posted by - November 3, 2017

உலக பௌத்த மகா சம்மேளனத்தின் 07வது பௌத்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இலங்கை வந்துள்ள பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பில் இவ்வருட மாநாடு இலங்கையில் நடைபெறுவதுடன், 47 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 300 பிரதான மகா நாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினர் இந்நிகழ்வில் பங்குபற்றுகின்றனர். ”உலக சமாதானத்திற்கு பௌத்த சமயம்” எனும் தொனிப்பொருளின்கீழ் மாநாடு நேற்று (02) முற்பகல் கொழும்பில்

உள்ளூராட்சி தேர்தல் : ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையப் போவதில்லை – துமிந்த

Posted by - November 3, 2017

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது ஸ்ரீலங்கா  சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டு சேர்ந்து போட்டியிடாது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பேருவளையில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போட்டியிடவுள்ளதாக இறுதியாக நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது

இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பாக வாழும் சூழல் இன்னும் ஏற்படவில்லை! -அனந்தி சசிதரன்!

Posted by - November 3, 2017

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளடங்கிய இலங்கையின் எப்பகுதியிலும் தமிழர்கள் பாதுகாப்பாக வாழும் சூழல் இன்னும் ஏற்பட்விலை. இந்நிலையில் மேற்குலக நாடுகளில் அகதி தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்படும் ஈழத்தமிழர்களை திருப்பியனுப்புவதென்பது அந்தந்த நாடுகள் கடைபிடித்துவரும் மனிதாபிமானம் மற்றும் மனித உரிமை சார்ந்த கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்குவதாகவே அமையும். கடந்த ஆட்சிக்காலங்களில் வெளித்தெரியும் வகையில் நடைபெற்று வந்த தமிழர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் நிலையானது இன்று மறைமுகமான வகையில் அதே வீச்சோடு தொடர்ந்து வருகின்றது. போரிற்கு பின்னரான காலத்தில் தமிழர்

இந்தியாவின் போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்.!

Posted by - November 3, 2017

இந்தியக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன. இந்தியக் கடற்படைக் கப்பல்களான திர் மற்றும் சுஜாதா என்பனவும், இந்திய கடலோர பாதுகாப்பு கப்பலான சாரதியும் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில், நல்லெண்ண மற்றும் பயிற்சிகள் பயணமாக இந்த போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த குழந்தை பரிதாபகரமாக மரணம்

Posted by - November 3, 2017

தம்புள்ளை வல்கம்வவ பிரதேசத்தை சேர்ந்த 5 வயது குழந்தையொன்று வீட்டில் விளையாடி கொண்டிருந்த வேளையில், வீட்டின் பின் பகுதியில் இருக்கும் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து மரணித்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார்  தெரிவிக்கின்றனர். குறித்த குழந்தையின் தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பாரிய நோயொன்றின் தாக்கத்தினால் மரணித்துள்ள நிலையில், அக்குழந்தை இவ்வாறு பரிதாபகரமான வகையில் மரணித்துள்ளது. வீட்டினுள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என்று தேடிய வேளையிலேயே அக்குழந்தையின் சடலம் வீட்டின் பின்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக

வீடற்ற மீனவ குடும்பங்களுக்கும் நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம்

Posted by - November 3, 2017

நிரந்தர வீடற்ற மீனவர்களுக்கும்,  முழுமையாக பூரணப்படுத்தப்படாத வீடுகளையுடைய மீனவ குடும்பங்களுக்கும் நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் மீன் பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தன் கீழ், முழுமையாக அமைக்கப்படவுள்ள வீடுகளுக்கு மூன்றரை இலட்சம் ரூபாய் நிதியுதவியும், பகுதியளவில் பூரணப்படுத்தப்பட்ட வீடுகளை பூரணப்படுத்துவதற்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படவுள்ளதாக மீன்பிடி மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நோனாகம – கலாசார நிலையத்தில் இதற்கான நிதியுதவி வழங்கும் ஆரம்ப நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரும் வெளியேறலாம் – சுமந்திரன்

Posted by - November 3, 2017

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரும் வெளியேறலாம். இணைய விரும்புவோரும் இணையலாம் அவர்களை நாம் வரவேற்போம் என தமிழ்தேசிய கூட்டமைப்பு கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தனித்துச் செயற்படப் போவதாக ஈபி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அண்மை நாள்களாகக் கூறிவரும் நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

மலையகத் தமிழர்கள் தேசிய இனமாக அங்கீகரிக்கப்படவேண்டும்-எம்.திலகராஜ்

Posted by - November 3, 2017

மலையகத் தமிழர்கள் அரசமைப்பில் தேசிய இனமாக அங்கீகரிக்கப்படவேண்டம் என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார். புதிய அரசமைப்புக்காக வழிநடத்தல் குழுவில் இடைக்கால அறிக்கை மீதான நான்காம் நாள் விவாதம் நேற்று அரசமைப்பு நிர்ணய சபையில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் முன்மொழியப்பட்டுள்ள இரண்டாம் சபைக்கு மாகாணசபை பிரிதிநிதிகளே உள்வாங்கப்படுவார்கள் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் சபைக்கு சிறுபான்மை சமூகங்களின் பிரநிதிகளே உள்வாங்கப்பட வேண்டும். அதற்காகவே இரண்டாம் சபை முன்மொழியப்பட்டது. இது குறித்து இணக்கப்பாட்டை காண

யாப்பு சீர்திருத்தமானது மக்களின் நலன் கருதியே உத்தேசிக்கப்படுகின்றது – ரவூப் ஹக்கீம்

Posted by - November 3, 2017

யாப்பு சீர்திருத்தமானது மக்களின் நலன் கருதியே உத்தேசிக்கப்படுகின்றது, இந்த நாட்டு மக்களுக்கு நாங்கள் வாக்களித்திருக்கிறோம் பொதுமக்களின் நலன்கருதி யாப்பு சீர்திருத்தமானது அவசியப்படுகிறது என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை (2)பலாங்கொடை பம்பாஹின்ன நீர்வழங்கல் மற்றும் சுகாதார நலனோம்பும் திட்டத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்; யாப்பு சீர்திருத்தமானது முன்னர் இருக்கின்ற சரத்துக்களிலுள்ள குறைபாடுகளை இனங்கண்டு அவற்றை திருத்தம் செய்து

கல், மணல் விநியோக பிரச்சினைகளுக்கு தீர்வு – நிமல் போபகே

Posted by - November 3, 2017

கல், மணல் மற்றும் மண் விநியோக நடவடிக்கைகளின் போது ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி நிமல் போபகே தெரிவித்துள்ளார். கட்டுமான நடவடிக்கைகளின் போது சுற்றாடலுக்கு பாதுகாப்பான முறையில் அவற்றை பெற்றுக் கொள்வது சவாலானது என நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். கல், மணல் விநியோகத்தின் போது ஏற்படுகின்ற சிரமங்கள் சம்பந்தமாக தகவல்களை பெற்றுக் கொள்ளக் கூடிய தொலைபேசி இலக்கம் ஒன்று