வீதியில் விழுந்த மோட்டார் சைக்கிளின் மீது பின்னால் வந்த கார் மோதியதில் இளைஞன் பரிதாபமாக பலி

Posted by - November 5, 2017

மாத்தளை, இரத்தோட்டை வீதியில் கைகாவலை பிரதேசத்தில்  நேற்று மாலை இடம் பெற்ற வாகன விபத்தொன்றில்  இரத்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வீதியால் சென்ற மோட்டார் சைக்கிளொன்று தடம் புரண்டு வீழந்துள்ள நிலையில், அதன் பின்னால்  பயணித்த மோட்டார் கார் ஒன்று பாதையில் விழுந்திருந்த மோட்டார் சைக்கிளின் சாரதி மீது மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தையடுத்து கார் சாரதி தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிசார்

ஜிந்துப்பிட்டியைச் சேர்ந்தவர் வெள்ளவத்தையில் தூக்கிட்டு தற்கொலை

Posted by - November 5, 2017

வௌ்ளவத்தை பிரதேசத்திலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பொன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு, – 13 ஜிந்துப்பிட்டியைச் சேர்ந்தவரே இவ்வாறு வெள்ளவத்தையில் தூக்கிட்டு தற்கொசெய்துகொண்டுள்ளார். இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் 37 வயதுடைய எம்.ஆர்.திலகராஜா என பொலிஸார் தெரிவித்தனர். கடமை புரியுமு் தொடர்மாடிக் குடியிருப்பின் நுழைவாயில் தூண் ஒன்றிலேயே குறித்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். தற்கொலைச் சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் சடலம்

குழப்பங்களுக்கு மத்தியில் விசேட பாதுகாப்புடன் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் முல்லைத்தீவு கிளைக்குழு கூட்டம்

Posted by - November 5, 2017

இலங்கை தமிழரசு கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட கிளைக்குழு கூட்டம் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் இன்றையதினம் நடைபெற்றது.கரைதுறைப்பற்று பிரதேச மூலக்கிளையின் தெரிவுக்கூட்டம் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச மூலகிளைக்குழு கூட்டம் என்பன இன்றையதினம் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் முன்னதாக கரைதுறைப்பற்று பிரதேச கூட்டம் முல்லைத்தீவு பிரதேச செயலக பொது மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ சுமந்திரன்,மாவை சேனாதிராஜா,சிவமோகன் ,சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் வடக்கு மாகாண பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன், ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

இலங்கை வரும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் துணை செயலர்

Posted by - November 5, 2017

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலர் தோமஸ் செனொன் இலங்கை வருகின்றார். நாளை  திங்கட் கிழமை இலங்கை வரும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் விஷேட கலந்துரையாடல்களிலும் ஈடுப்படவுள்ளார். அதே போன்று எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பையும் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். மேலும் திங்கட்கிழமை மாலை 7.30

பதுளையில் 29,000 கட்டடங்களுக்கு மண்சரிவு அபாயம்!

Posted by - November 5, 2017

பதுளை மாவட்டத்தில் இருக்கும் 98 பாடசாலைகள் மண்சரிவு அபாயம் காணப்படும் மிக ஆபத்தான பிரதேசங்களில் அமைந்துள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. 

அரசியல் கைதிகளுக்காக தொடர்ந்தும் உழைப்போம்!

Posted by - November 5, 2017

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப்போராட்டத்தை நடத்தி வந்த தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் தங்கள் போராட்டத்தை நிறைவுக்கு

பெற்றோல் பற்றாக்குறைக்கு அரசாங்கமே பொறுப்பு!

Posted by - November 5, 2017

நாட்டில் ஏற்பட்டுள்ள பெற்றோல் பற்றாக்குறைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என, பெற்றோலிய வள சேவையாளர்கள் சங்கத்தின் செயலாளர் டி.ஏ.ராஜகருணா குறிப்பிட்டுள்ளார். 

இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணியின் 80 வீதம் நிறைவு!

Posted by - November 5, 2017

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் கிளிநொச்சி இரணைமடு குளத்தின், அபிவிருத்தி பணியின் 80 சதவீதம் நிறைவுற்றுள்ளதாகவும், இரண்டு வருடங்களின் பின் இம்முறை வழமையை விட இரண்டு அடி நீர் மேலதிகமாக சேமிக்க கூடிய நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிலங்களை விடுவிக்கக் கோரி யாழில் போராட்டம்!

Posted by - November 5, 2017

யாழ்ப்பாணம் – வலி வடக்கு பலாலி பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள தமது நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி அப் பகுதி மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.