தீர்ப்பைக் கேட்டு நீதிமன்றிலேயே விஷம் அருந்திய குற்றவாளி!

Posted by - November 10, 2017

ஐந்து வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியொருவர், நீதிமன்ற மறியலில் வைத்து விஷம் அருந்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 2010ஆம் ஆண்டு, சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் கண்காணிப்பாளரை ஹெய்யந்துடுவை பகுதியில் வைத்துத் தாக்கியதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று கம்பஹா நீதிமன்றில் வழங்கப்பட்டது. அதில், குறித்த நபருக்கு ஐந்தாண்டு கடூழிய சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பு வழங்கப்பட்ட சில நிமிடங்களில், மறியலில் வைக்கப்பட்டிருந்த குற்றவாளி திடீரென உடல்

சிகிச்சை பெற வந்த நோயாளி தற்கொலை!

Posted by - November 10, 2017

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர், நான்காம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ராகமை போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. பமுனுவ, போபிட்டிய பகுதியைச் சேர்ந்த அதிகாரி ஆரச்சிகே சோமதாச (65) என்பவர், சிறுநீரகக் கோளாறு காரணமாக ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நோயின் தாக்கத்தைத் தாங்க முடியாமலோ அல்லது அடுத்து என்ன செய்வது என்று புரியாத கலக்கத்தினாலோ குறித்த நபர் கடந்த மூன்று நாட்களுக்குள் ஓரிரு முறை தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். இந்நிலையில், இன்று (10) அவர்

தமிழர்கள் குழந்தைகளைக் குறைவாகப் பெற்றுக்கொள்வது எதிர்காலத்தில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் – பொ.ஐங்கரநேசன்

Posted by - November 10, 2017

தமிழ்க்குடும்பங்கள் பல வருடங்களுக்கு முன்னர் சராசரியாக ஐந்து பிள்ளைகளைக் கொண்டிருந்தன. ஆனால், இப்போது தமிழ்க்குடும்பங்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை.

விஞ்ஞான ஆய்வு கூடம் இல்லாத 3,000 பாடசாலைகளுக்கு ‘நடமாடும் ஆய்வுகூட’ வசதி

Posted by - November 10, 2017

மாணவர்கள் குறைவாக காணப்படும் கஷ்ட பிரதேசங்களிலுள்ள 3,000 பாடசாலைகளுக்கு “நடமாடும் விஞ்ஞான உபகரணங்கள்” வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் ஆலோசனைக்கு அமைய கல்வி அமைச்சு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது. எதிர்வரும் 5 வருடங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் இரசாயன பொருட்கள் இந்த உபகரண தொகுயில் அடங்குவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி மேல் மாகாணத்தில் 448 பாடசாலைகளுக்கும், மத்திய மாகாணத்தில் 440 பாடசாலைகளுக்கும், தென் மாகாணத்தில் 306 பாடசாலைகளுக்கும், வட மாகாணத்தில்

சுமார் 2 கிலோ கிராம் புகையிலை தூளுடன் ஒருவர் கைது

Posted by - November 10, 2017

நோர்வூட் வெஞ்சர் தோட்டப்பகுதியில் சுமார் 1 கிலோ 50 கிராம் கொண்ட புகையிலை தூளுடன் (என்.சி) ஒருவர் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த வேளையில் வீட்டை சோதனை செய்த பொழுது இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்

ஏமன் நாட்டில் உலகம் கண்டிராத பெரும்பஞ்சம் ஏற்படும்: ஐ.நா. சபை எச்சரிக்கை

Posted by - November 10, 2017

ஏமன் நாட்டுக்கு செல்கிற அனைத்து பாதைகளையும் திறக்காவிட்டால், அந்த நாடு உலகம் இதுவரை கண்டிராத பஞ்சத்தை சந்திக்க வேண்டியது வரும் என்று ஐ.நா. சபை எச்சரிக்கை செய்துள்ளது.

வெளிநாட்டு பணத்தை கடத்த முற்பட்ட மலேசிய பிரஜைகள் நால்வர் கைது

Posted by - November 10, 2017

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்ற மலேசிய நாட்டவர்கள் நால்வர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 3 கோடியே 23 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 208,000 அமெரிக்க டொலரை கடத்த முற்பட்டபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மலேசிய, கோலாலம்பூர் நோக்கி புறப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மத சகிப்புத்தன்மையை ஊக்குவிக்க ரூ.3.2 கோடி நிதி: அமெரிக்கா!

Posted by - November 10, 2017

இந்தியாவில் மத சகிப்புத்தன்மையை அதிகரிக்கவும், மத அடிப்படையிலான வன்முறைகளைக் குறைக்கவும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு சுமார் 5 லட்சம் டாலர் (சுமார் ரூ.3.2 கோடி) பரிசளிக்கவிருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

சைட்டம் – விசேட குழுவினால் திட்ட வரைபு பூர்த்தி

Posted by - November 10, 2017

மருத்துவ கல்விக்கு தேவைப்படும் குறைந்தளவு தராதரம் தொடர்பான திட்ட வரைபு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் சைட்டம் தனியார் வைத்திய கல்லூரி முற்றாக ஒழிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் அறிக்கை வெளியானது. அதனை அடுத்து நாட்டின் வைத்திய பீடங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் வைத்திய கல்வி அடிப்படை தகுதி மற்றும் தராதரம் குறித்த வரைபு பூர்த்தியாகியுள்ளது. இதுவிடயம் தொடர்பில் ஜனாதிபதி நியமித்த விசேட குழுவே இந்த திட்ட வரைபை பூர்த்தி செய்துள்ளது. சைட்டம் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் முன்வைக்கப்பட்ட யோசனைகளில் ஒன்றாக இது

உயர்தர தொழில் கற்கை நெறிக்கு 2,100 ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ள நடவடிக்கை

Posted by - November 10, 2017

இவ்வருடம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தரம் 13 வரையிலான கட்டாயக்கல்வி உறுதி செய்யப்பட்ட கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உயர்தர தொழில் கற்கைநெறிக்காக ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் வழிகாட்டலின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது . இதற்கான வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் புதிய உயர்தர கல்வி கற்கை நெறிக்காக தமிழ் மற்றும் சிங்கள மொழி ஆசிரியர்களுக்கான வெற்றிடத்திற்காக இலங்கை ஆசிரியர் சேவையில் 3 – 1 அ