வடக்கில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை ,மீறினால் அபராதம்-சி.வி.கே.சிவஞானம்

Posted by - February 6, 2017

பூமி தினத்தினை முன்னிட்டு வடக்கில் பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனைகள் மற்றும் அதன் பயன்பாடுகளுக்கு முற்றாக தடை விதித்து வடக்கு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்தல் விடுத்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 82 ஆவது தீர்மானத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்படும் விடயம் தொடர்பில் வடக்கில் உள்ள 5 மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் கழிவுகளால் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டது. இலங்கை அரசு 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 மைக்ரோன் அளவிற்கும் குறைவான தடிப்பை கொண்ட பிளாஸ்டிக் உற்பத்தி விற்பனை மற்றும் பயன்பாடுகளுக்கு

தேங்காய் விலை அடுத்து வரும் இரண்டு மாதங்களில் குறையும் -கபில் யஹாந்தாவல

Posted by - February 6, 2017

தேங்காய் விலை அடுத்து வரும் இரண்டு மாதங்களில் குறையும் என்று தெங்கு அபிவிருத்தி சபையின் தலைவர் கபில் யஹாந்தாவல தெரிவித்தார். கடந்த சில வாரங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக தேய்காயின் விலை அதிகரித்தது. இறக்குமதி செய்யப்படும் பாம்ஒயில் மீது விதிக்கப்பட்டுள்ள வரித்தொகையை குறைப்பதற்கு அமைச்சர் நவீன் திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் ஊடாக விலையைக் கட்டுப்படுத்த முடியும் என்று திரு. யஹாந்தவல நம்பிக்கை வெளியிட்டார். நாட்டின் தெங்கு உற்பத்தியில் 40 வீதமான உற்பத்தி வீண் விரயம்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிலைப்பாட்டிற்கு ஆதரவளிக்கப்படும்-தினேஸ் குணவர்தன

Posted by - February 6, 2017

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிலைப்பாட்டிற்கு ஆதரவளிக்கப்படும் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாக கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் அண்மையில் கூட்டு எதிர்க்கட்சி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. இந்தப்பேச்சுவார்த்தைகளின் பின்னர் சங்கத்திற்கு பூரண ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளோம். நாட்டின்

ஜெனீவா பிரேரணை தொடர்பில் அமெரிக்காவுடன் பேச்சு

Posted by - February 6, 2017

இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஜெனீவா பிரேரணை தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுடன் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தற்பொழுது அமெரிக்காவுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மினுவங்கொட பகுதியில் வைத்திருந்த ஐவர் கைது

Posted by - February 6, 2017

மினுவங்கொட பகுதியில் போலி வாகன அனுமதிப் பத்திரம் வைத்திருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த ஐவரும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஐவரும் பஹலகம,மாபொல ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் இலங்கையில்……..

Posted by - February 6, 2017

சர்வதேச ரீதியில் பாரியளவிலான போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள, போதைப் பொருள் மன்னனாக கருதப்படும் நோர்வே நாட்டவரான ஜர்மன்ட் கெபலன்ட் எனும் பெயரையுடையவர், எமது நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக வெளியான சர்வதேச தகவல்களையடுத்து பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர். மாலைத்தீவிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் இலங்கை வந்துள்ளதாக சில சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவர் ஹஷீஸ் எனும் பெயரையுடைய போதைப் பொருள் விற்பனை வலையமைப்புடன் தொடர்புடைய ஒருவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது. இது தொடர்பில், பொலிஸ் போதை

ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாயவினால் வெற்றியீட்ட முடியாது: எஸ்.பி

Posted by - February 6, 2017

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராபஜக்ச, ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட மாட்டார் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்கூறலில் வேகமில்லை : ரணிலை எச்சரித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர்!

Posted by - February 6, 2017

பொறுப்புக்கூறல் தொடர்பான விவகாரங்களில், சிறிலங்கா மெதுவாகவே செயற்படுவதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன்,கவலை வெளியிட்டுள்ளார்.

நான் ஒன்றும் சட்டம் தெரியாமல் கூறவில்லை..! வடக்கு முதல்வர் ஆதங்கம்!!

Posted by - February 6, 2017

இலங்கையில் காலத்திற்கு காலம் ஆட்சிக்குவரும் பெரும்பான்மையின அரசியல் தலைமைகள் போர் குற்றங்களை விசாரிக்க கூடாது என்பதில் திடமான நிலைப்பாட்டினை கொண்டிருக்கின்றார்கள். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.