கவிரதன்

மாத்தளையில் விபத்து – இளைஞன் பலி

Posted by - November 8, 2017
மாத்தளை – அக்குரண பிரதேசத்தில் கெப் ரக வாகனம் ஒன்று குடைசாய்ந்ததில் ஒருவர் பலியானார். சம்பவத்தில் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். கலேவெலயில் இருந்து கண்டி பகுதிக்கு மங்கள நிகழ்வொன்றுக்குச் சென்றுக்கொண்டிருந்த வேளையில் நேற்றிரவு இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் பலியானவர்…
மேலும்

டெங்கு நோயை கட்டுப்படுத்த பாடசாலை மட்டங்களில் வேலைத்திட்டம்

Posted by - November 8, 2017
பாடசாலை சிறுவர்களிடம் டெங்கு நோய் பரவரை கட்டுப்படுத்தும் பொருட்டு கல்வி அமைச்சு பாடசாலைகள் மட்டத்தில் விரிவான வேலைத்திட்டம் ஒன்றை தொடர்ச்சியாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் ஆலோசனையின் பேரில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்படி, எதிர்வரும் 10ஆம் 11ஆம்…
மேலும்

பாரிஸ் காலநிலை மாற்ற உடன்படிக்கை

Posted by - November 8, 2017
பாரிஸ் காலநிலை மாற்ற உடன்படிக்கையில் சிரியாவும் கைச்சாத்திடவுள்ளதாக அறிவித்துள்ளது. 2015ம் ஆண்டு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கை, உலக காலநிலை மாற்றத்திற்கு ஏற்க பூமி வெப்பமடைவதை தடுப்பதற்கு பல்வேறு நாடுகள் இணக்கம் தெரிவித்தன. இதில் சிரியாவும் நிக்கரகுவாவும் மாத்திரமே கைச்சாத்திடவில்லை. அதேநேரம்…
மேலும்

அமைச்சர் பியசேன கமகே பதவி ஏற்பு

Posted by - November 8, 2017
கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதை அடுத்து, அந்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பியசேன கமகே நாளை பதவி ஏற்கவுள்ளதாக கூறப்படுகிறது. இரட்டைக் குடியுரிமைக் கொண்டவர் என்ற அடிப்படையில், 19ம் திருத்தச் சட்டத்தின் கீழ் அவரால் நாடாளுமன்ற உறுப்பினர்…
மேலும்

மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்க உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்கிறது

Posted by - November 8, 2017
மாலபே  தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் ஆரம்பித்துள்ள சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. தேசிய பல் மருத்துவமனைக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தில் அந்த சங்கத்தை…
மேலும்

அரசியல் அமைப்பு பேரவை கூடவுள்ளது

Posted by - November 8, 2017
அரசியல் அமைப்பு பேரவை அதன் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று முற்பகல் 10.30 அளவில் நாடாளுமன்றில் மீண்டும் கூடவுள்ளது. புதிய அரசியல் யாப்பு குறித்த வழிநடத்தற்குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பிலான 5ஆம் நாள் விவாதம் இடம்பெறவுள்ளது. இந்த இடைக்கால அறிக்கை…
மேலும்

மானஸ் தீவு அகதிகளின் வசதிகள் குறித்து நீதிமன்றத்தில் மேன்முறையீடு

Posted by - November 8, 2017
மானஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகளுக்கான அடிப்படை வசதிகளை வழங்கக் கோரி, பப்புவா நியுகினி நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்படவுள்ளது. அகதிகள் சார்பான சட்டத்தரணி பென் லோமி இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த முகாம் மூடப்பட்டுள்ள நிலையில், அதற்கான பாதுகாப்பு,…
மேலும்

டெங்கு நோய் காரணமாக 400 பேர் வரை மரணம்

Posted by - November 8, 2017
டெங்கு நோய் பரவல் காரணமாக இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 400 பேர் வரையில் மரணித்துள்ளனர். சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் புள்ளிவிபரங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 502 பேர்…
மேலும்

மறுசீரமைப்பு செயற்பாடுகள் மக்களுக்கு நன்மைப் பகிரும் வகையில் இல்லை- ஜப்பான்

Posted by - November 8, 2017
தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற மறுசீரமைப்பு செயற்பாடுகள், நாட்டின் அனைத்து மக்களுக்கும் நன்மைப் பகிரும் வகையில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானின் உச்ச நீதிமன்ற விசாரணையாளரும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பாதிக்கப்பட்டோருக்கான நம்பிக்கை நிதியத்தின் பணிபாளர் சபைத் தலைவருமான…
மேலும்

நாட்டின் பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பான அறிக்கை

Posted by - November 8, 2017
நாட்டில் நிலவுகின்ற பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பில் அறிக்கை ஒன்றை கையளிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர், அரசாங்கம் முக்கியமான பல தீர்மானங்களை மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…
மேலும்