நிலையவள்

மைத்திரிபால சிறிசேன சுகயீனமுற்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது-ஜனாதிபதி செயலகம்

Posted by - January 4, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகயீனமுற்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. சுகயீனமுற்றமையினால் ஜனாதிபதியின் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், வேலைப்பளு காரணமாகவே ஜனாதிபதியின் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ரத்து செய்யப்பட்டதாக ஜனாதிபதி…
மேலும்

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு,இராணுவத்துக்கு நீதிவான் நேற்று உத்தரவு

Posted by - January 4, 2017
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு, இராணுவத்துக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான்உத்தரவிட்டுள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தில் சரணடைந்து காணாமற்போன விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணையின் போதே முல்லைத்தீவு மாவட்ட நீதிவான்…
மேலும்

மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளுக்கான நீதிமன்ற பொறிமுறைக்கு ஒரு வெளிநாட்டு நீதிபதியேனும் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும்- நல்லிணக்கத்திற்கான செயலணி

Posted by - January 4, 2017
இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படுகின்ற யுத்த குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட பாரியளவிலான மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளுக்கான நீதிமன்ற பொறிமுறைக்கு ஒரு வெளிநாட்டு நீதிபதியேனும் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என நல்லிணக்கத்திற்கான செயலணி பரிந்துரை முன்வைத்துள்ளது. நல்லிணக்கத்திற்கான செயலணி தனது பரிந்துரைகளை…
மேலும்

ஸ்ரீகொத்தவிற்கு தேவையான மின்சாரம் இன்று முதல் முழுமையாக சூரிய கலத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்படும்- அஜித் பீ பெரேரா

Posted by - January 4, 2017
மாற்று மின்சக்தி பயன்பாட்டை அறிமுகப்படுத்தும் புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான ஸ்ரீகொத்தவில் இன்று முதல் சூரிய சக்தி மின்கலம் பயன்படுத்தப்படவுள்ளது. இதன்படி, ஸ்ரீகொத்தவிற்கு தேவையான மின்சாரம் இன்று முதல் முழுமையாக சூரிய கலத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக…
மேலும்

யாழ்ப்பாணத்திற்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் நட்புறவு அதிகாரி சஞ்சே பாண்டே விஜயம் (காணொளி)

Posted by - January 4, 2017
இந்திய வெளிவிவகார அமைச்சின் நட்புறவு அதிகாரி சஞ்சே பாண்டே இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை பார்வையிட்டார். இந்திய அரசினால் அமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கு, யாழ்ப்பாணத்தில்…
மேலும்

ஹக்கல தாவரவியல் பூங்காவின் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிப்பு

Posted by - January 4, 2017
நுவரெலியா மாவட்டத்தில் ஹக்கல தாவரவியல் பூங்காவிற்கு நாள் தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் ஹக்கல தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலாபயணிகள், தாங்கள் கொண்டுவரும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கழிவுகளை பூங்காவிலும், வீதியோரம் மற்றும் வனப்பகுதிகளிலும் வீசிச்செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

பொதுசுகாதார பரிசோதக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கும் இடையிலான  பேச்சுவார்தையில் இணக்கம் (காணொளி)

Posted by - January 4, 2017
பொது சுகாதார பரிசோதகர்கள் தமது பணிப்புக்கணிப்பு தொழிற்சங்க போராட்டத்தை கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்திற்கும் பொது சுகாதார தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டமையை அடுத்து பொது சுகாதார பரிசோதகர்கள் தமது…
மேலும்

மாத்தறை நகரிலுள்ள உணவக வர்த்தகர் மீது தாக்குதல் (காணொளி)

Posted by - January 4, 2017
மாத்தறை நகரிலுள்ள உணவகமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த சிலர், வர்த்தகர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதா எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.மூன்று பேரை கொண்ட குழுவொன்றினால் குறித்த வர்த்தகர் தாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், குறித்த நபர்கள் வர்த்தகருக்கு…
மேலும்

பாகிஸ்தானின் இரண்டு கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளன

Posted by - January 4, 2017
பாகிஸ்தானின் கடல் பாதுகாப்பு கப்பல்களான ஹிங்கோல் மற்றும் பெசோல் என்ற இரண்டு கப்பல்களும் இலங்கைக்கு வருகை தரவுள்ளன. பாகிஸ்தானின் கடல் பாதுகாப்பு கப்பல்களான ஹிங்கோல் மற்றும் பெசோல் என்ற இரண்டு கப்பல்களும் நான்கு நாட்கள் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு நாளை கொழும்பு…
மேலும்

கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய எதிர்ப்பு நடவடிக்கை

Posted by - January 4, 2017
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய எதிர்ப்பு நடவடிக்கை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம், திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் உட்பட பொதுச் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய எதிர்ப்பு நடவடிக்கை…
மேலும்