நிலையவள்

மீண்டும் உணவுப் பொதியின் விலை உயர்வு

Posted by - February 5, 2017
உணவுப் பொதியொன்றின் விலை 10 ரூபாய் அல்லது 15 ரூபாயினால் ​அதிகரிக்கப்படவுள்ளதாக, இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். நாட்டில் பல பாகங்களிலும் தற்போது தேங்காய்ப் பற்றாக்குறை காணப்படுவதனால், தேங்காயின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே உணவுப்…
மேலும்

மஸ்கெலியா ரிகாடன் பகுதியிலிருந்து நல்லதண்ணி வரை வீதியோரங்களில் பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்த 4 பேருக்கு அபராதம்

Posted by - February 5, 2017
மஸ்கெலியா ரிகாடன் பகுதியிலிருந்து நல்லதண்ணி வரை வீதியோரங்களில் உள்ள கடைகளில் மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்த விற்பனை நிலைய உரிமையாளர்கள் நான்கு பேருக்கு எதிராக ஹட்டன் நீதிமன்றத்தில் வழக்கு…
மேலும்

மட்டக்களப்பில் நடைபெறவுள்ள கிழக்கின் எழுக தமிழ் பேரணிக்கு உதவ முன்வருமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

Posted by - February 5, 2017
 மட்டக்களப்பில் நடைபெறவுள்ள கிழக்கின் எழுக தமிழ் பேரணிக்கு உதவ முன்வருமாறு பல்வேறு தரப்பினருக்கும் தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. மட்டக்களப்பில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த அழைப்பினை தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் ரி.வசந்தராஜா தெரிவித்துள்ளார். தொடர்ந்து…
மேலும்

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணிகளுடன் பயணத்தை தொடர்ந்த தனியார் பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல்

Posted by - February 5, 2017
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணிகளுடன் பயணத்தை தொடர்ந்த தனியார் பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி நேற்று முன்தினம்  மாலை 80க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்த…
மேலும்

கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு

Posted by - February 5, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் இன்று ஆறாவது நாளாகவும் தமது போராட்டத்தை தொடர்கின்றனர். கேப்பாப்புலவு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான போராட்டம் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிகப்பீட மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு தொடர்பாக பல்கலைக்கழக மாணவர் குழு இன்று நேரில் அங்கு…
மேலும்

மறைந்த ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 11 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு

Posted by - February 5, 2017
மறைந்த ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 11 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வும் படுகொலை செய்யப்பட்ட 44 ஊடகவியலாளர்களுக்கும் நீதியான விசாரணை கோரி கவனயீர்ப்புப் போராட்டமும், மட்டக்களப்பில் நடைபெற்றன. மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவுக்கு முன்னால், இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. ஊடகச்…
மேலும்

முறக்கொட்டாஞ்சேனையில் தீ விபத்தினால் வீட்டை இழந்தவர்களுக்கு உதவித்திட்டம்

Posted by - February 5, 2017
முறக்கொட்டாஞ்சேனையில் அண்மையில் தீக்கிரையான வீட்டின் உரிமையாளர்களுக்கு துணிகளை கொள்வனவு செய்வதற்காக ஒரு தொகை நிதியுதவியும், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள பாடசாலை உபகரணங்களும் முனைப்பு நிறுவனத்தினால் இன்று  வழங்கி வைக்கப்பட்டுள்ளது. முனைப்பின் தலைவர் மா.சசிகுமார் செயலாளர் சி.குகநாதன், பொருளாளர் அ.தயானந்தரவி ஆகியோர்…
மேலும்

யாழில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

Posted by - February 5, 2017
யாழ் கீரிமலை பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை காணாமல் போன 10 வயது சிறுவன் நீர்த்தொட்டியில் வீழ்ந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டில் இருந்து தனது பாட்டியின் வீட்டிற்கு சென்ற கஜேந்திரகுமார் கஜீபன் என்ற சிறுவனே இவ்வாறு பாழடைந்த தொட்டியில்…
மேலும்

கேப்பாப்புலவு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புதுக்குடியிருப்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - February 5, 2017
கேப்பாப்புலவு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புதுக்குடியிருப்பில் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. புதுக்குடியிருப்பு போராட்டம் நேற்று முன்தினம் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் ஆரம்பிக்கப்பட்டது. இந்தநிலையில், குறித்த இடத்திற்கு இன்று சென்ற வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுடன்…
மேலும்

கோப் குழு என்ற பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்-சந்திம வீரக்கொடி

Posted by - February 5, 2017
கோப் குழு என்ற பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். சில விடயங்கள் குறித்து அரசியல் கோணத்தில் பார்க்காமல் செயற்படுவது மிகவும் முக்கியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திருகோணமலை எண்ணெய்…
மேலும்