நிலையவள்

வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்க, ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை….(காணொளி)

Posted by - February 25, 2017
  மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்க, ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள, அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர்…
மேலும்

தியாகராஜா துவாரகேஸ்வரனின் முகநூலை தடைசெய்யக்கோரி (காணொளி)

Posted by - February 25, 2017
யாழ்ப்பாண வர்த்தகர் தியாகராஜா துவாரகேஸ்வரனின் முகநூலை தடைசெய்யக்கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் கண்டண பேரணி ஒன்றை நடாத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சாரதிகள், நடத்துநர்கள் யாழ்ப்பாணத்தில் தமிழ்  மக்கள் கண்டணப்பேரணி எனும் பெயரில் கண்டணப்பேரணியை நடத்தியுள்ளனர்.…
மேலும்

வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் நான்காவது நாளாகவும்….(காணொளி)

Posted by - February 25, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் நான்காவது நாளாகவும் காந்தி பூங்கா முன்பாக நடைபெற்றுவருகின்றது. இரவு பகலாக வீதிகளில் சமைத்து உண்டு தமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்;டதாரிகள் போராட்டத்தினை…
மேலும்

அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு வலியுறுத்தி, கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - February 25, 2017
  கிளிநொச்சி செல்வாநகர் மக்கள், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு வலியுறுத்தி, கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். கிராமத்திற்கான வீதி கட்டமைப்பு, குடிநீர் வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, செல்வாநகர் கிராம உத்தியோகத்தர் அலுவலகம் முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் சிறுவர்கள்,…
மேலும்

பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு இளைஞர்கள் ஆதரவு…. (காணொளி)

Posted by - February 25, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு இளைஞர்கள் இன்று ஆதரவு வழங்கியுள்ளனர். முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் இன்றுடன் 26 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர். வீதியோரத்தில் வெயிலின் மத்தியில், இரவு வேளையில் கொட்டும் பனிக்கு மத்தியில் 26…
மேலும்

மாவடியோடை பகுதியில் காட்டு யானை தாக்கியதில்…. (காணொளி)

Posted by - February 25, 2017
மட்டக்களப்பு மாவடியோடை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடியோடை பகுதியில், 4 பிள்ளைகளின் தந்தை காட்டு யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர். இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் 4…
மேலும்

ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் தற்சமையம் லக்சம்புர்க் நாட்டை நோக்கி பயணிக்கின்றது .

Posted by - February 25, 2017
தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் இரண்டாவது நாளாக மீண்டும் இன்று காலை அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு தற்சமையம் லக்சம்புர்க் நாட்டை நோக்கி பயணிக்கின்றது.மனிதநேய ஈருருளிப்பயணம் எதிர்வரும் நாட்களில் லக்சம்புர்க்,…
மேலும்

1762 வர்த்தக நிலையங்களில் சுற்றி வளைப்பு

Posted by - February 25, 2017
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளின் சுற்றி வளைப்பில் புறக்கோட்டைச் சந்தையில் அரிசியை அதிக விலைக்கு விற்றக்கப்பட்ட 3000 கிலோ கிராம் அரிசியும், காலாவதியான 2600 கிலோ கிராம் அரிசியும் கைப்பற்றப்பட்டதாக  கைத்தொழில் அமைச்சு இன்று) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

சுகாதார துறையில் காணப்படும் முக்கியமான சிக்கல்கள் தொடர்பில் நடவடிக்கை

Posted by - February 25, 2017
நாட்டின் சுகாதார துறையில் காணப்படும் முக்கியமான சிக்கல்கள் தொடர்பில் எதிர்வரும் கால பகுதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இதனை தெரிவித்துள்ளார்
மேலும்

மாமாங்கம் பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில்…(காணொளி)

Posted by - February 25, 2017
மட்டக்களப்பு – மாமாங்கம் பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் பகுதியில் இன்று  ஒருவர்  தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாமாங்கம் கிராம சேவை பிரிவை சேர்ந்த ஒரு பிள்ளையின்…
மேலும்