நிலையவள்

வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த அணிதிரள்வோம். – ஆனந்தன்

Posted by - February 26, 2017
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த வேண்டும் என்பது வன்னிவாழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கை. இதுகுறித்து நாம் பாராளுமன்றத்திலும் தொடர்ந்து உரையாற்றி வந்துள்ளோம். 22.09.2016 அன்று பாராளுமன்றத்தில் பல்கலைக்கழக திருத்தச்சட்ட மூல விவாதத்தில் வன்னி பல்கலைக்கழமாக தரமுயர்த்தப்பட…
மேலும்

மொரட்டுவ பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாக களத்தில்

Posted by - February 26, 2017
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியதுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி இன்றுடன் 27ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை விமானப்படை தளத்திற்கு முன்பாக வீதி ஓரத்தில் முன்னெடுத்துவருகின்றனர் வீதியோரத்தில் வெயில் கொட்டும் பனிகளையெல்லாம் தாண்டி சொந்தமண்ணில் கால்பதிக்க வேண்டும்…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் ஆதரவு

Posted by - February 26, 2017
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இவ்வாறு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தென்னிலங்கையைச் சேர்ந்த மக்களே இணைந்துள்ளனர். அத்துடன் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி அத்துடன்…
மேலும்

அரிசி மோசடியில் ஈடுபட்ட 1300 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - February 26, 2017
கூடிய விலையில் அரிசியை விற்பனை செய்தல் மற்றும் நுகர்வோருக்கு தரமற்ற அரிசியை விற்பனை செய்தல் போன்ற குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 1300 வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீன் தெரிவித்துள்ளார். நுகர்வோர் சேவை…
மேலும்

மாவட்டச்செயலகங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில்லை – சாள்ஸ் நிர்மலநாதன்

Posted by - February 26, 2017
எமது மாவட்டச் செயலகங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களை எமது அரசியல்வாதிகளே நிறைவேற்றாத நிலையில் தெற்கு அரசியல்வாதிகளும் , அரசும் நிறைவேற்றுவதில்லை என நாம் எவ்வாறு குறைகூற முடியும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து…
மேலும்

டக்ளஸின் அலுவலகத்தின் மின் கட்டண நிலுவையை கட்டுமாறு கடிதம்

Posted by - February 26, 2017
டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகமாக இயங்கும் சிறிதர் தியட்டரின் மின்சார கட்டண நிலுவை    85 லட்சத்து 50 ஆயிரத்து 982 ரூபாவினை செலுத்துமாறு அறுவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளதாக இ.மி.சபையின் யாழ். மாவட்ட படிப்பாளர் ஞாணகணேசன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்…
மேலும்

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு ரணில் காலக்கெடு

Posted by - February 26, 2017
அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்துமாறு அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு நாளை வரை (27) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காலக்கெடு விதித்துள்ளார். அத்துடன், இவ்வருடத்தில்  கட்சியாக இருந்து முன்னெடுக்க வேண்டிய செயற்திட்டங்கள்…
மேலும்

முல்லைத்தீவு அம்பகாமம் பகுதியில் சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

Posted by - February 26, 2017
முல்லைத்தீவு அம்பகாமம் பகுதியில் நடமாடிய சிறுத்தைப்புலி கரிப்பட்ட முறிப்பு கிராமத்திற்குள்  நுழைந்தமையினால் வயல் வேலைக்குச் சென்றவர்கள் உழவு இயந்திரத்தினையும் கைவிட்ட தப்பி ஓடியமையினால் உயிர் தப்பினர். இது தொடர்பினில் மேலும் தெரிய வருவது , முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர்…
மேலும்

சத்திர சிகிச்சையையடுத்து, வைத்தியர் நோயாளியுடன் 1 மணிநேரம் செலவிடவேண்டும்

Posted by - February 26, 2017
சத்திர சிகிச்சையின் பின்னர், வைத்தியர் நோயாளியுடன் ஒரு மணித்தியாலத்தை செலவிடவேண்டும் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவ துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எத்தகைய தனியார் வைத்தியசாலைகளிலும் நோயாளர்கள் தொடர்பான வைத்திய பரிசோதனைகளின் போது வைத்தியர் ஒருவர்…
மேலும்

ரத்ன தேரர் தலைமையிலான இலங்கை தேசிய மகா சபை 28 இல் கூடுகின்றது

Posted by - February 26, 2017
அத்துரலிய ரத்ன தேரர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை தேசிய மகா சபை முதற்தடவையாக எதிர்வரும் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணிக்கு கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றவுள்ள இந்நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால…
மேலும்