நிலையவள்

அம்பாறை, ஒலுவில் கடல் பகுதியில் மரத்தினாலான மாதிரி தேவாலயம்(காணொளி)

Posted by - March 11, 2017
அம்பாறை, ஒலுவில் கடல் பகுதியில் மரத்தினாலான மாதிரி தேவாலயமொன்று மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை, ஒலுவில் கடல் பிராந்தியத்தில் 20 அடி சதுரப் பரப்பளவு கொண்ட மரத்திலான மாதிரி தேவாலயமொன்று மிதந்து வந்த நிலையில், கடற்படையினரால் நேற்று மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆதரவாக வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி(காணொளி)

Posted by - March 11, 2017
  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆதரவாக வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப்போராட்டம் இன்றுடன் 16ஆவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித்து புதிய ஜனநாயக மாக்சிச லெனிசிச கட்சியினரால்…
மேலும்

இறால் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

Posted by - March 11, 2017
இறால் பிடிக்கச் சென்ற நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி தருமபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி, சுண்டிக்குளம் பகுதியில் இறால் பிடிப்பதற்காக சென்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கிளிநொச்சி கண்ணகிநகரைச் சேர்ந்த 32 வயதுடைய செ.செல்வகுமார் என தருமபுரம்…
மேலும்

மர்மமான முறையில் மரணமடைந்துள்ள காவற்துறை உத்தியோகஸ்தர்

Posted by - March 11, 2017
கருவலகஸ்வெவ காவற்துறை நிலையத்தில் சேவை புரிந்த காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைககளை கருவலகஸ்வெவ காவற்துறை முன்னெடுத்துள்ளது.
மேலும்

புகையிரதத்தில் இருந்து வீழ்ந்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் பலி!

Posted by - March 11, 2017
கொழும்பு தொடக்கம் பதுளை வரை பயணித்த புகையிரதத்தில் இருந்து வீழ்ந்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை அலவ்வ – வலகுபுர பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். சடலம் பிரேத பரிசோதனைக்காக பொல்கஹவெல மருத்துவமனையில்…
மேலும்

கிழக்கு மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Posted by - March 11, 2017
கடந்த 3 மாதங்களில் டெங்கு நோயாளர்கள் 20126 பேர் பதிவாகியுள்ளதாக தொற்று நோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களில் 42.65 வீதமானோர் மேல் மாகாணத்தினை சேர்ந்தவர்கள் என பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனிடயே,கிழக்கு மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த முதலமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளதாக…
மேலும்

ஹம்பாந்தோட்டைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க பிரதிநிதிகள்

Posted by - March 11, 2017
ஹம்பாந்தோட்டைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க பிரதிநிதிகள் குழுவினர், அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர்.  அமெரிக்காவின் கடற்படை கப்பலொன்று கடந்த ஆறாம் திகதி ஹம்பாந்தோடடை துறைமுகத்துக்குச் சென்றது.  இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப் உள்ளிட்ட அமெரிக்க பிரதிநிதிகள் குழுவினர் இதன்போது ஹம்பாந்தோட்டைக்கு…
மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய சந்திப்பு இன்று

Posted by - March 11, 2017
 உறுப்பினர்களுக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்று தற்போது வவுனியாவில் இடம்பெறுகின்றது. இந்தக் சந்திப்பு இன்று காலை 10.30 க்கு ஆரம்பமாகியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இடம்பெறும் இந்தச் சந்திப்பில், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண சபை…
மேலும்

செவிலிய அதிகாரிகள் பணி புறக்கணிப்பில்….

Posted by - March 11, 2017
செவிலிய அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பணி புறக்கணிப்பில் ஈடுபட தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேதனம் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன் வைத்து இம் மாதம் 20 ஆம் திகதி பணி புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை செவிலியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

உலக பிரசித்திபெற்ற இந்துமத ஆன்மீக தலைவரான சுவாமி சரவண பாபாவின் விசேட ஆன்மீக நிகழ்வு(காணொளி)

Posted by - March 10, 2017
உலக பிரசித்திபெற்ற இந்துமத ஆன்மீக தலைவரான சுவாமி சரவண பாபாவின் விசேட ஆன்மீக நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது. இலங்கைக்கு ஆன்மீக விஜயம் மேற்கொண்ட சுவாமிக்கு மட்டக்களப்பில் இருந்துவிடுக்கப்பட்ட அழைப்பினையடுத்து அவர் மட்டக்களப்புக்கும் விஜயம் மேற்கொண்டார். இந்நிலையில் நேற்று மாலை…
மேலும்