நிலையவள்

காரியாலயமொன்றின் மீது தாக்குதல், 3 பிக்குகள் உட்பட ஆறுபேர் கைது

Posted by - June 16, 2017
கம்பஹாவிலுள்ள காரியாலயமொன்றை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மூன்று பிக்குகள் உட்பட ஆறுபேர் கம்பஹா பொலிஸாரினால் கைது நேற்று(15) நண்பகல் செய்யப்பட்டுள்ளனர். சிங்ஹலே ஜாதிக இயக்கத்தின் தலைவர் சாலிய ரி. ரணவகவின் கம்பஹா முதுன்கொட வீட்டில் இருந்த காரியாலயத்தை பலவந்தமாக உடைத்து, அக்காரியாலயத்தில்…
மேலும்

விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு மரண தண்டனை

Posted by - June 16, 2017
விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு மொனராகலை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. நேற்று இவ்வாறு மரண தண்டனைக்கு உள்ளானவர், மட்டக்களப்பு – வெல்லாவெளி பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான நபரொருவர் என தெரியவந்துள்ளது. 2008 ஆம் ஆண்டு ஜனவரி 21…
மேலும்

முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளை வர்த்தக சங்கங்கள் பூரண கடையடைப்பு

Posted by - June 16, 2017
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பதவியிலிருந்து நீக்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளை வர்த்தக சங்கங்கள் பூரண கடையடைப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும்

யாழ் நகர் கர்த்தாலால் முடங்கியது

Posted by - June 16, 2017
தமிழ் மக்கள் பேரவையினரால் முதலமைச்சருக்கு கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. போக்குவரத்து சேவைகள் இடம்பெறவில்லை வர்த்தக நிலையங்கள் யாவும் பூட்டப்பட்டுள்ளன.
மேலும்

பிலியந்தலை துப்பாக்கிச் சூட்டின் பிரதான சந்தேக நபர் கைது

Posted by - June 16, 2017
பிலியந்தலை பிரதேசத்தில் காவற்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் சிலரின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மெதிரிகிரிய பிரதேசத்தில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 10…
மேலும்

கர்த்தால் இடம்பெறும் நிலையில் யாழில் விசேட அதிரடிப்படையினர் ரோந்து நடவடிக்கையில்

Posted by - June 16, 2017
தமிழ் மக்கள் பேரவையினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கர்த்தாலினால் யாழில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில் யாழில் அனர்த்தம் ஏதும் ஏற்படுவதை தவிர்க்கும் முகமாக யாழ் நகரில் பொலீஸ் விசேட அதிரடி படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

இன்று முதல் டெங்கு ஒழிப்புக்காக ஒருமணி நேர சுத்திகரிப்பு மணித்தியாலம் பிரகடனம்

Posted by - June 16, 2017
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 9.30 முதல் 10.30 வரையில் ஒரு மணித்தியாலும் சுத்திகரிப்பு மணித்தியாலமாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி…
மேலும்

மதவாச்சியில் கோர விபத்து! இருவர் பலி; மேலும் 10 பேர் காயம்

Posted by - June 16, 2017
மதவாச்சி பூணாவை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் மதகுரு உட்பட இருவர் பலியானதுடன்,  மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர் என மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர். மதவாச்சி பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்த வேன் எதிர் திசையில் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதுண்டதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.…
மேலும்

செல்பி எடுப்பவர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்

Posted by - June 16, 2017
செல்பி படங்களை எடுக்கச் சென்று பலர் உயரிழந்த சம்பவங்கள் அண்மையில் நாடு பூராகவும் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் செல்பி எடுப்பவர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மற்றவர்களிடமிருந்து கருத்துக்களை எதிர்பார்த்து நாள் ஒன்றுக்கு 3 செல்பி படங்களுக்கு மேல்…
மேலும்

கிளிநொச்சியின் இயல்பு நிலையும் பாதிப்பு

Posted by - June 16, 2017
வடக்கு மாகாண முதலமைச்சர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கில் மேற்கொள்ளப்பட்ட கர்த்தால் காரணமாக கிளிநொச்சியின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சியில் பெரும்பாலான வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டிருந்ததோடு போக்குவரத்து சேவைகளும் வழமை போன்று இடம்பெறவில்லை. மேலும் பாடசாலைகளுக்கும் மாணவாகளின் வரவு மிகவும்…
மேலும்