நிலையவள்

வடக்கு முதலமைச்சருடனான சமரச முயற்சியை, தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்- மாவை சேனாதிராஜா(காணொளி)

Posted by - June 20, 2017
வடக்கு முதலமைச்சருடனான சமரச முயற்சியை, தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும்

வடக்கு மாகாண சபையின் வியாழக்கிழமை அமர்வை சுமூகமாக நடாத்துவதற்கு நடவடிக்கை- எம்.கே.சிவாஜிலிங்கம்(காணொளி)

Posted by - June 20, 2017
வடக்கு மாகாண சபையின் வியாழக்கிழமை அமர்வை சுமூகமாக நடாத்துவதற்குரிய நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாக வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று மாலை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு கூறினார். நாளை காலை 10.30 மணிக்கு அமர்வு…
மேலும்

குருகுலராஜா தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாக வட மாகாண முதலமைச்சர் தெரிவிப்பு

Posted by - June 20, 2017
வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்ரன் தெரிவித்துள்ளார். தொலைபேசி ஊடாக அவர் இதனைக் கூறியதாக யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அந்த கடிதம் தனக்கு…
மேலும்

இரணைதீவு மக்களை மீள்குடியேற்ற அனுமதிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஜனாதிபதிக்கு கடிதம்!

Posted by - June 20, 2017
இரணைதீவு மக்களை அவர்களது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியேற்றுமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்  கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். இரணைதீவு மக்கள் தம்மைத் தமது பூர்வீக வாழ்விடத்தில் குடியேறி வாழ அனுமதிக்குமாறு கோரி   தொடர் போராட்டத்தில்…
மேலும்

10 வயது மாணவி மீது வீதியில் வைத்து ஊசி ஏற்றப்பட்டுள்ள கொடூரம்

Posted by - June 20, 2017
கந்தளாய் – பேரமடுவ பிரதேசத்தில் 10 வயது மாணவி மீது வீதியில் வைத்து ஊசி ஏற்றப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த மாணவி கடந்த 17 ஆம் திகதி மேலதிக வகுப்பொன்றுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய வேளை உந்துருளியில்…
மேலும்

ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கத் தயார்; கேப்பாபுலவு மக்கள்

Posted by - June 20, 2017
தங்களுடைய பிரச்சினைகளில் மாத்திரமே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தலையிடுவதாகவும் மக்களின் பிரச்சினைகளில் எந்தவித அக்கறையுமின்றி உள்ளதாகவும் முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், தமது காணி விடுவிக்கப்படும் என வாக்குறுதியளித்த…
மேலும்

75 ஆயிரம் வெளிநாட்டவர்ளுக்கு பார்வை வழங்கியுள்ள இலங்கை!

Posted by - June 20, 2017
பார்வை குறைபாடுடைய சுமார் 75 ஆயிரம் வெளிநாட்டவர்ளுக்கு பார்வை வழங்க இலங்கைக்கு முடிந்துள்ளதாக இலங்கை கண்தானம் செய்வோர் சங்கத்தின் சர்வதேச கண் வங்கியின் சிரேஷ்ட முகாமையாளர் ஜனத் சமன் மாதர ஆராச்சி தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டாகும்போது உலகில் பார்வை குறைப்பாடை…
மேலும்

வரி தொடர்பான திருத்த சட்டமூலமொன்று கொண்டுவரப்படவுள்ளது – டில்வின் சில்வா

Posted by - June 20, 2017
வரி தொடர்பான திருத்த சட்டமூலமொன்று இன்னும் இரண்டு மாதங்களில் கொண்டுவரப்படவுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இதனை தெரிவித்துள்ளார். அரசாங்கம் பொருளாதார கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், மக்கள் மீதான…
மேலும்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அளவிலேயே நடத்தப்பட முடியும்

Posted by - June 20, 2017
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அளவிலேயே நடத்தப்பட முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கெஃபே நடத்திய கருத்தரங்கு ஒன்றில் வைத்து அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். உள்ளுராட்சி மன்றங்கள்…
மேலும்

3.44 கிராம் ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை

Posted by - June 20, 2017
3.44 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை தன்னகத்தே வைத்திருந்த பிரதிவாதியொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 04ம் திகதி குறித்த நபர் கொழும்பு கொம்பனித் தெரு பிரதேசத்தில் வைத்து காவற்துறை…
மேலும்