நிலையவள்

அரசாங்கமே சைட்டம் தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுக்கும் – அஜித்

Posted by - June 29, 2017
சைட்டம் தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பது மருத்துவ சங்கமல்ல அரசாங்கமே என மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும்

தொடர்ச்சியான வேலைநிறுத்த போராட்டமொன்றிற்கு தயாராகும் மருத்துவர்கள்

Posted by - June 29, 2017
எதிர்வரும் தினத்தில் சைட்டம் பிரச்சினையை முன்னிறுத்தி தொடர்ச்சியான வேலைநிறுத்த போராட்டமொன்றில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.இதேவேளை, வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்படும் தினம் தொடர்பில் அந்த சங்கத்தின் செயற்குழு தீர்மானிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மாலபே தனியார் மருத்துவ…
மேலும்

தம்பியை கொலை செய்த அண்ணன்!

Posted by - June 29, 2017
கேகாலை , சமாஜ மாவத்தை பிரதேசத்தில் தடியொன்றால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு குடிபோதையில் இருந்த இரண்டு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு நீண்டதில் , மூத்த சகோதரர் அவரது இளைய சகோதரரை தடியொன்றால் தாக்கியுள்ளதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.…
மேலும்

குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் பொதுமக்கள் எதிர்ப்பில்

Posted by - June 29, 2017
ஜா-ஹெல தேலதுர பிரதேசத்தில் முத்துராஜவெல பகுதியில் தனியார் காணியொன்றில் கொழும்பு குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் பொதுமக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

கிளிநொச்சி மாவட்டத்தில் நிர்ணய விலையில் மணல் விநியோகிக்கப்படும்- அரச அதிபர் தெரிவிப்பு

Posted by - June 29, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் மாவட்ட சுற்றாடல் சிபாரிசுக்குழுவினால் நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே மணல் விநியோகிக்கப்பட வேண்டும் மீறுவோர் மீது உரிய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அரச அதிபர் திரு சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்றையதினம்(29.06.2017) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற…
மேலும்

சொந்த நிலத்தில் கால்பதிக்கும் வரை போராட்டம் தொடரும் – கேப்பாபுலவு மக்கள்

Posted by - June 29, 2017
தாம் முன்னெடுத்துவரும் தொடர்போராட்டம் தொடர்பில் உரிய தரப்பினரிடம் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுவது தொடர்பில் தாம் கவலையடைவதாக கேப்பாபுலவில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர். கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 121 ஆவது நாளை எட்டியுள்ளது.138 குடும்பங்களுக்குசொந்தமான 482 ஏக்கர்…
மேலும்

காலத்தை கடத்தாது ஜனாதிபதி உரிய பதில் வழங்கவேண்டும் என கோரிக்கை

Posted by - June 29, 2017
தமக்குரிய பதில் வழங்கப்படும் வரை தமது போராட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ள, வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஜனாதிபதி காலத்தை கடத்தாது உடன் பதில் வழங்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த, கைதுசெய்யப்பட்ட மற்றும் யுத்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகள்…
மேலும்

புதிய அரசியல் யாப்பு தொடர்பான முக்கியத் தீர்மானம் அடுத்தவாரம் – ரணில்

Posted by - June 29, 2017
புதிய அரசியல் யாப்பு தொடர்பான முக்கியத் தீர்மானம் அடுத்தவாரம் மேற்கொள்ளப்படவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு – பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற அரசியல்யாப்பு தொடர்பான விளக்கமளிப்பு மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். அரசியல்…
மேலும்

உமாஓய பிரச்சினைக்கு காரணம் தற்போதைய அரசாங்கம் என குற்றச்சாட்டு

Posted by - June 29, 2017
உமாஓய வேலைத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு காரணம் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளே என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பு – கோட்டை ஸ்ரீ சம்புத்தாலோக விகாரையில் நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வுகளைத் தொடர்ந்து அவர் ஊடகவியலாளர்களிடம் இதனை தெரிவித்தார்.…
மேலும்

யாழ்ப்பாண நூலகத்திற்கு சுமார் 16 ஆயிரம் நூல்கள் அன்பளிப்பு

Posted by - June 29, 2017
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சந்து, இன்று யாழ்ப்பாண நூலகத்திற்கு சுமார் 16 ஆயிரம் நூல்களை அன்பளிப்பாக வழங்கவுள்ளார். யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜன் இதனை அறிவித்துள்ளார். வரலாறு, கலை, கலாசாரம், தத்துவவியல், அரசியல், விஞ்ஞானம், புவியியல்,…
மேலும்