நிலையவள்

மரபணு தொழில்நுட்பத்தின் மூலம் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க சுகாதார அமைச்சு அவதானம்!

Posted by - July 6, 2017
அமெரிக்காவில் செயற்படுத்தப்படும் மரபணு தொழில்நுட்பத்தின் மூலம், நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறையை இந்நாட்டில் செயற்படுத்த சுகாதார அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. மரபணு தொழில்நுட்பம் மூலம் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடிய முறை தொடர்பில், இரு வாரங்களினுள் அறிக்கையொன்றை தயாரித்து, விடயத்திற்கு பொறுப்பான…
மேலும்

தமிழிசைக்கும்   வடக்கு மாகாண முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பு

Posted by - July 6, 2017
பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடு கிளைத் தலைவர் தமிழிசை இலங்கைக்கான திடீர் பயணம் மேற்கொண்டு நேற்றைய தினம் இலங்கைக்கு வருகை தந்தார். இன்று யாழ் விஐயம் மேற்கொண்டுள்ள தமிழிசைக்கும்   வடக்கு மாகாண முதலமைச்சருக்குமிடையில் தற்போது சந்திப்பு இடம்பெற்றுவருகின்றது. இந்திய பாரதீய…
மேலும்

சொந்த நிலத்தில் கால்பதிக்கும் வரை போராட்டம் தொடரும் – கேப்பாபுலவு மக்கள்

Posted by - July 6, 2017
கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 128 ஆவது நாளை எட்டியுள்ளது.138 குடும்பங்களுக்குசொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமது காணிகளிலுள்ள பொருளாதாரத்தை இராணுவத்தினர் அனுபவித்து வரும் அதேவேளை தாம் பொருளாதாரத்தை கொண்டு நடத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக மக்கள் கவலை…
மேலும்

வீடு ஒன்றில் இருந்து குழந்தையின் உடலம் மீட்பு

Posted by - July 6, 2017
தங்காலை நகரில் வீடு ஒன்றில் இருந்து குழந்தையின் உடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு, குறித்த குழந்தையின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குழந்தை பிறந்து ஒருநாள் என  அறியவந்துள்ளதுடன், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை…
மேலும்

இன்று 121 ஆவது நாளாக தொடரும் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்

Posted by - July 6, 2017
தமக்குரிய பதில் வழங்கப்படும் வரை தமது போராட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ள, வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று 121  ஆவது நாளாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக வீதியோரத்தில் கூட்டாரம் அமைத்து போராட்டத்திலீடுபட்டுவருகின்றனர்  இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த, கைதுசெய்யப்பட்ட மற்றும் யுத்த காலத்தில் கடத்தப்பட்டு…
மேலும்

மருத்துவ சபையின் மனு விசாரணையில் தலையிட அரச மருத்துவ அதிகாரிகளுக்கு அனுமதி

Posted by - July 6, 2017
இலங்கை மருத்துவ சபையால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு விசாரணையில் தலையிட்டு விளக்கமளிக்க, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு, உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில், மேன்முறையீட்டு நீதிமன்றம் பெற்றுக்கொடுத்திருந்த தீர்ப்பை வலுவிழக்கச்செய்யுமாறு கோரி…
மேலும்

11 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

Posted by - July 6, 2017
பேலியகொடை – நான்காம் கட்டை கறுத்த பாலத்திற்கு அருகாமையில் 11 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது. குறித்த கேரளா கஞ்சாவை முச்சக்கர வண்டியில் கடத்திச் செல்ல முற்பட்ட போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
மேலும்

கிராமசேவகர் ஒருவர் தொடரூந்தில் மோதி பலி!

Posted by - July 6, 2017
மாத்தறையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த சாகரிக்கா கடுகதி தொடரூந்தில் மோதி உந்துருளி செலுத்துனர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்துள்ளவர் 43 வயதான கஹவ பிரதேசத்தில் கிரமசேவகராக சேவையாற்றி வந்த ரோஹன இந்திக என தெரியவந்துள்ளது. அம்பலாங்கொடை, வேனமுல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தின்…
மேலும்

வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டைத்திருவிழா

Posted by - July 6, 2017
வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டைத்திருவிழா நேற்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. தான்றோண்றீஸ்வரராக ஒட்டுசுட்டான் மண்ணில் குடிகொண்டு மக்களுக்கு அருள்பாலித்து வரும் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய திருவிழாவில் சிறப்பு அம்சமான வேட்டைத்திருவிழா பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சிறப்புற…
மேலும்

இலங்கையின் மிகப்பெரிய மாற்றுசக்தி மின் நிலையம் கிளிநொச்சியில்

Posted by - July 6, 2017
இலங்கையின் மிகப்பெரிய மாற்றுசக்தி மின் நிலையத்துக்கான வேலைத்திட்டம், கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தலைமையில் இன்று காலை பூநகரி கௌதாரிமுனை  மன்னித்தலை செபஸ்ரியார்  ஆலயத்தில்  குறித்த  நிகழ்வு இடம்பெற்றது.  அதனைத்…
மேலும்