நிலையவள்

நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையை அரசுக்கு வழங்கும் நிகழ்வு திங்களன்று

Posted by - July 14, 2017
நெவில் பெர்னாண்டோ தனியார் மருத்துவமனையை எதிர்வரும் 17 ஆம் திகதி அரசு பொறுப்பேற்கும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கு போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வைத்தியசாலையை பொறுப்பேற்கும்…
மேலும்

புதிய தீவிரவாத முறியடிப்பு சட்ட மூலம் உருவாக்கப்பட்டு வருகின்றது- சாகல ரத்நாயக்க

Posted by - July 14, 2017
பூகோளரீதியாக எழுந்துள்ள தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்கும் வகையிலேயே, புதிய தீவிரவாத முறியடிப்பு சட்ட மூலம் உருவாக்கப்பட்டு வருவதாக, சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஆரம்பமான எட்டாவது தென்னாசிய நாடுகளின் உள்துறை அமைச்சர்களின் மாநாட்டில் உரையாற்றும்…
மேலும்

136 ஆவது நாளாக இராணுவ முகாம் முன்பாக சொந்த நிலத்துக்கு காத்திருக்கும் கேப்பாபுலவு மக்கள்

Posted by - July 14, 2017
கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 136  ஆவது நாளை எட்டியுள்ளது.138 குடும்பங்களுக்கு சொந்தமான482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமது சொந்த நிலத்தில் கால் பதிக்கும் எண்ணத்தோடு மார்ச் மாதம் 1 ம் திகதி ஆரம்பித்த  தொடர் போராட்டத்தை தீர்வு…
மேலும்

பொது அறிவுப் போட்டியில் பங்குபற்றிய மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கிவைக்கும் நிகழ்வு

Posted by - July 14, 2017
வீரமக்கள் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட பொது அறிவுப் போட்டியில் பங்குபற்றிய மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கிவைக்கும் நிகழ்வு- 28ஆவது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு, அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் நினைவாக நடாத்தப்பட்ட பொது அறிவுப் போட்டியில் பங்குபற்றியமைக்காக 8,000 மாணவ, மாணவியர்களுக்கு…
மேலும்

கடந்த கால பிழைகள் அனைத்தும் சீர்த்திருத்தப்பட வேண்டும்- மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Posted by - July 14, 2017
போரின் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு, கடந்த கால பிழைகள் அனைத்தும் சீர்த்திருத்தப்பட வேண்டும். எனினும் இந்த விடயத்தில் அரசாங்கம் தடுமாற்றப்போக்கை காட்டி வருகிறது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. நீண்டகாலமாக இடம்பெற்ற போரின் காரணமாக பல பாதிப்புக்களை சந்தித்துள்ள…
மேலும்

புலமை பரிசில் பரீட்சை விண்ணப்பம் அஞ்சலிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு

Posted by - July 14, 2017
தரம் 5 மாணவர்களுக்காக புலமை பரிசில் பரீட்சை விண்ணப்பம் இன்றைய தினம் அஞ்சல் செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அத்துடன், திருத்தங்கள் இருப்பின் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதிவரை விண்ணப்பிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும்

அபயராம விகாரையில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதிமன்றம் தடையுத்தரவு

Posted by - July 14, 2017
நாரஹேன்பிட்டிய அபயராம விகாரையில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள இடைக்கால தடையுத்தரவை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அபயராம விகாரையை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதன் ஊடாக பக்தர்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதனால் அதற்கு தடை விதிக்குமாறு…
மேலும்

சட்டவிரோதமாக இலங்கை வந்துள்ள மூவர் கைது

Posted by - July 14, 2017
இந்தியாவில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக இலங்கை வந்துள்ள 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கற்பிடி காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கு அமைய குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. இதன்போது படகில்…
மேலும்

129 ஆவது நாளாக வீதியோரத்தில் ஏக்கத்துடன் காத்திருக்கும் உறவுகள்

Posted by - July 14, 2017
தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற பதில் கூறும்  வரை தமது போராட்டம் நிறுத்தப்படாது  என  தெரிவித்துள்ள, வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று 129   ஆவது நாளாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக வீதியோரத்தில் கூட்டாரம் அமைத்து போராட்டத்திலீடுபட்டுவருகின்றனர். இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த, கைதுசெய்யப்பட்ட மற்றும் யுத்த…
மேலும்

புதையல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது

Posted by - July 14, 2017
படல்கும்புர – ஏக்கர் 15 பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது. சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு பாரவூர்திகளும் மற்றும் சிற்றூர்ந்து ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கம்பளை, கட்டுகஸ்தோட்டை,…
மேலும்