நிலையவள்

ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம்

Posted by - October 3, 2017
ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  9 நாட்கள் பயணமாக ஜேர்மன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அவர் செல்லவுள்ளார். இதன்போது அவர் பல்வேறு முக்கிய சந்திப்புகளை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

இலங்கையின் தகவல் அறியும் சட்டத்துக்கு உலகில் முதலிடம்- சபாநாயகர்

Posted by - October 3, 2017
இலங்கையின் தகவல் அறியும் சட்டம் உலகிலுள்ள நாடுகளில் காணப்படும் தகவல் அறியும் சட்டங்களை விடவும்  சிறந்த தகவல் அறியும் சட்டமாக  இடம்பிடித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இலங்கையர் என்ற வகையில் நாம் பெருமைப்பட வேண்டும் எனவும் இதனைப் பயன்படுத்துவதை நமது…
மேலும்

கிழக்கு கடற்பரப்பில் முருங்கைக் கற்களுக்கு பாதிப்பு – மஹிந்த அமரவீர

Posted by - October 3, 2017
கிழக்கு கடற்பரப்பில் முருங்கைக் கற்களுக்கு பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பாசி வகையொன்று வியாபித்து வருவதாக மீன்பிடி மற்றும் நீர்வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த பாசி வகை வௌியிடும் ரசாயன என்சயிமன்கள் காரணமாக முருங்கைக் கற்கள் பழுதடைந்து பாதிப்புக்கு உள்ளாவதாக அமைச்சர்…
மேலும்

அர்ஜூன் அலோசியஸ் உட்பட நால்வருக்கு வௌிநாடு செல்லாததடை

Posted by - October 3, 2017
பெர்ப்பச்சுவல் பங்கு தரகு நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன உள்ளிட்ட 4 பேருக்கு வௌிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோட்டே நீதிவான் நீதிமன்றத்தினால் நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்

இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப்பிரயோகம் – கைதானவருக்கு 16ம் திகதிவரை விளக்கமறியல்

Posted by - October 3, 2017
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் குறித்த…
மேலும்

ரோஹிங்கியா அகதிகளை வில்பத்துவில் குடியேற்றும் திட்டம் நிறைவேறாது – கம்மன்பில

Posted by - October 3, 2017
ரோஹிங்கியா அகதிகளை வில்பத்துவில் குடியேற்றும் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் திட்டம் ஒரு போதும் நடைமுறை சாத்தியமாகாது என பாராளுமன்ற உறுப்பினரும் பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார் . கொழும்பில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில்…
மேலும்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்

Posted by - October 3, 2017
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட திரு சுனில் சமரவீர தனது கடமைகளை நேற்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் உத்தியோகபூர்வமாக பொறுப்போற்றார். இந்த உத்தியோகபூர்வ பதவி பொறுப்பேற்பு நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் திரு. கபில வைத்தியரத்ன,உட்பட இராஜாங்க அமைச்சின் சிரேஷ்ட…
மேலும்

முல்லைத்தீவு பச்சை புல்மோட்டை வெளி பகுதியில் அகழ்வு நடவடிக்கை (காணொளி)

Posted by - October 2, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பச்சை புல்மோட்டை வெளி மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் புதைக்கப்பட்ட நிலையில் ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து அகழ்வு பணிக்கு முல்லைத்தீவு  நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டது. அதற்கமைவாக குறித்த பகுதி அகழ்வதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு…
மேலும்

கிழக்கு மாகாண திணைக்களங்களில் கடமையாற்றும் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்க வேண்டாம் -ஆளுநர் ரோஹித போகொல்(காணொளி)

Posted by - October 2, 2017
கிழக்கு மாகாண திணைக்களங்களில் கடமையாற்றும் எந்தவொரு அதிகாரிக்கும் இடமாற்றம் வழங்க வேண்டாம் என, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, திணைக்களங்களின் செயலாளர்களுக்கும் பணிப்பாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். கிழக்கு மாகாண பிரதம செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர், திணைக்களங்களின் செயலாளர்கள் ஆகியோருடன் இடம்பெற்ற…
மேலும்

அரச அதிகாரிகள் தமது கடமைகளை செய்வதில்லை-நா.வேதநாயகன் (காணொளி)

Posted by - October 2, 2017
யாழ்ப்பாணத்தில் உள்ள அரச அதிகாரிகள் தமது கடமைகளை செய்யாத காரணத்தினால் பல பிரச்சினைகள் எற்படுகின்றது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று பொலிஸ் பொது மக்கள் கூட்டத்தில் அரச அதிகாரிகள் மீதான…
மேலும்