நிலையவள்

புதிய அரசியலமைப்பு நாட்டுக்கு அவசியமில்லை- மீண்டும் சங்க சபை வலிறுத்தல்

Posted by - October 22, 2017
தற்போதைய நிலையில் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதைவிட, நாட்டிலுள்ள வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதன் பக்கம் கவனத்தைச் செலுத்துவது சிறந்தது எனவும் அரசியலமைப்பொன்று அவசியம் இல்லையெனவும் தமது சங்க சபை தீர்மானம் எடுத்துள்ளதாக கோட்டே ஸ்ரீ கல்யானி சாமசிறி சங்க சபையின் கோட்டே பிரிவின்…
மேலும்

நாளை முதல் ஐந்து நாட்களுக்கு வடக்கு ரயில் சேவை மட்டுப்பாடு

Posted by - October 22, 2017
வடக்கு ரயில் பாதையில் நாவட்குளிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலுள்ள பாலம் திருத்தப்பணிகள் காரணமாக நாளை (23) முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் ஐந்து நாட்களுக்கு ரயில் போக்குவரத்து இடம்பெற மாட்டாதென ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. இதனால், கொழும்பிலிருந்து நாவட்குளி…
மேலும்

யாழ் இந்திய துணை தூதுவரின் மகள் பயணித்த வாகனம் சங்குப்பிட்டியில் விபத்து!

Posted by - October 22, 2017
யாழ் இந்திய துணை தூதுவா் ஆர். நடராஜனின்  மகள் பயணித்த வாகனம் சங்குப்பிட்டியில் இன்று காலை  விபத்துகுள்ளாகி உள்ளது விபத்துத் தொடர்பில்  தெரியவருவதாவது இன்று காலை யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த யாழ் இந்திய துணை தூதுவா் ஆர். நடராஜனின் …
மேலும்

கையூட்டல் பெற்ற காவற்துறை அலுவலர் இருவர் கைது!

Posted by - October 22, 2017
2 ஆயிரம் ரூபா கையூட்டல் பெற்ற காவற்துறை அலுவலர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அநுராதப்புரம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட போக்குவரத்து பிரிவில் பணியாற்றியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பணியில் ஈடுப்பட்டிருந்த வேளை கையூட்டல் பெற்றதாக முறைப்பாடு ஒன்று கிடைத்ததனையடுத்தே அவர்கள்…
மேலும்

பிரசன்ன சஞ்ஜீவ விளக்கமறியலில்!

Posted by - October 22, 2017
மேல் மாகாண சபை உறுப்பினர் பிரசன்ன சஞ்ஜீவ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதன்படி நாளை வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தர்க்கா நகரில் அரச வைத்தியர்களின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் பிரசன்ன சஞ்ஜிவ…
மேலும்

அதிகார பகிர்வின் மூலம் தீர்வு கண்ட உலகில் எந்த நாடும் இல்லை-கோத்தபாய

Posted by - October 22, 2017
யுத்த காலத்தில் பயங்கரவாதிகளுக்காக வெளிநாடுகளில் நிதி சேகரித்தவர்களும் ஆயுதங்கள் சேகரித்து அனுப்பியவர்களுமே இன்று புதிய அரசியலமைப்புக்காக முன்னின்று செயற்படுகின்றனர். அத்துடன் அதிகார பகிர்வின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு கண்ட உலகில் எந்த நாடும் இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய…
மேலும்

மாநாயக்க தேரர்களை சந்திக்கிறது ஸ்ரீ.சு கட்சி

Posted by - October 22, 2017
புதிய அரசியல் அமைப்பு குறித்த நிலைப்பாட்டினை மாநாயக்க தேரர்களுக்கு எடுத்துரைக்க ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி தீவிர முயற்சிகளை எடுத்துவருவதாகவும் இந்த வார இறுதிக்குள் மாநாயக தேரர்களை சந்தித்து  அரசியலமைப்பின் தேவையினையும், உண்மைகளையும் எடுத்துரைக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.
மேலும்

தீய சக்திகளை தாண்டி புதிய அரசியலமைப்பு வரும்- லக்ஷ்மன்

Posted by - October 22, 2017
தீய சக்திகளினால் தடைகள் ஏற்பட்டாலும் புதிய அரசியல் அமைப்பினை உருவாக்கியே தீருவோம். நல்லிணக்கத்திற்கு புதிய அரசியல் அமைப்பே ஒரே தீர்வு என அமைச்சர் லக்ஷ்மன்  கிரியல்ல தெரிவித்தார். மாநாயக்க தேரர்களை நல்லாட்சிக்கு எதிராக செயற்பட வைக்கவே ஒருசிலர் முயற்சித்து வருகின்றதாகவும் அவர்…
மேலும்

வந்த கருமம் இருந்த கருமத்தை விட மோசமானது- சிரிவிமல தேரர்

Posted by - October 22, 2017
வரலாற்று நெடுகிலும் நாடு செல்ல வேண்டிய பாதையை சரிசெய்து கொடுத்தது மகா சங்கத்தினரே எனவும் தற்போதைய அரசாங்கம் மகா சங்கத்தினருடன் அகௌரவமான முறையில் நடந்துகொள்கின்றது எனவும் கடம்பே ராஜோபவனாராதிபதி கெப்படியாகொட சிரிவிமல தேரர் தெரிவித்துள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக்…
மேலும்

கடந்த அரசாங்கத்தில் ஒன்றரைக் கோடி ரூபா யானையை 26 கோடிக்கு கொள்வனவு

Posted by - October 22, 2017
திறந்த சந்தையில் ஒன்றரைக் கோடி ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியுமாகவுள்ள நிலையில், மியன்மாரிலிருந்து 26 கோடி ரூபா கொடுத்து யானையொன்றை தலதா மாளிகைக்கு கொள்வனவு செய்துள்ளதாகவும், இதில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் தனியாள் விசாரணை ஆணைக்குழு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவிடம்…
மேலும்