நிலையவள்

கஹவத்தை தேயிலை தோட்டத்தில் இருந்து சடலமொன்று மீட்பு

Posted by - October 23, 2017
கஹவத்தை மடலகம பிரதேசத்திலுள்ள தேயிலை தோட்டத்திலிருந்து ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நகல்வதுர மடலகம பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவரின் சடலம் என…
மேலும்

உள்ளுராட்சிமன்ற தேர்தல் பிற்செல்லலாம் – எஸ்.பி திசாநாயக்க

Posted by - October 23, 2017
அடுத்த உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்துவது பெப்ரவரி மாதம்வரை பிற்செல்லலாம் என அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார். நுவரெலியா மற்றும் மஸ்கெலிய ஆசனங்களில் புதிதாக சில பிரதேச சபைகள் நிறுவப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தில் உள்ள…
மேலும்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - October 23, 2017
உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாகவும் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும் விசேட கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டனர் குறித்த அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியும் சகல அரசியல்…
மேலும்

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து! இருவர் பலி

Posted by - October 23, 2017
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் புற்களை வெட்டிகொண்டிருந்த பணியாளர்கள் இரண்டு பேர் மீது மோட்டார் வாகனம் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவரும் உயிரிழந்துள்ளனர். குறித்த மோட்டார் வாகனத்தின் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க – பமுனுகம…
மேலும்

குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞன் பலி

Posted by - October 23, 2017
வவுனியாவில் குளத்திற்கு குளிக்கச்சென்ற இளைஞன் மாலையில் உயிரிழந்த நிலையில் சடலமாக குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா ஈச்சங்குளம், மறவன்குளம் பகுதியிலுள்ள நடராசா சந்தனகுமார் என்ற 36 வயதுடைய…
மேலும்

எக்காரணம் கொண்டும் புதிய அரசியலமைப்பு வேண்டாம்- ஞானசார தேரர்

Posted by - October 23, 2017
அரச சார்பற்ற அமைப்புக்களின் தேவைக்கு ஏற்றாற் போல் இந்நாட்டுக்கு புதிய அரசியலமைப்பை கொண்டு வரும் நடவடிக்கைக்கு இடமளிக்கக் கூடாது எனவும், அந்த சிந்தனையையும் நடவடிக்கையையும் விரட்டியடிக்கப்பட வேண்டும் எனவும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் அறிவித்துள்ளாார். இந்த…
மேலும்

அரசாங்கம் மகா சங்கத்தினரைப் புறக்கணிப்பது பிரச்சினைக்குரியது- விஜிதசிறி தேரர்

Posted by - October 23, 2017
மகா சங்கத்தினரின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும், ஆபத்துக்கள் குறித்த எச்சரிக்கைகளையும் அரசாங்கம் கருத்தில் கொண்டே செயற்பட வேண்டும் எனவும், அவ்வாறின்றி செயற்பட முனையுமாயின் அது பிரச்சினையையே ஏற்படுத்தும் எனவும் மல்வத்து பீட சங்க சபையின் போஷகர் நியங்கொட விஜிதசிறி தேரர் தெரிவித்துள்ளார். இந்த…
மேலும்

சுமந்திரனும் செல்வம் அடைக்கலநாதனும் தமிழர் பகுதி சிங்கள மயமாகுவதற்கு உடந்தையாக செயற்படுகின்றனரா?- சுரேஸ் பிரேமச்சந்திரன்(காணொளி)

Posted by - October 22, 2017
சுமந்திரனும் செல்வம் அடைக்கலநாதனும் தமிழர் பகுதி சிங்கள மயமாகுவதற்கு உடந்தையாக செயற்படுகின்றனரா? என ஈ.பி.ஆர்.எல.எப. கட்சியின் தலைவர் சுரேஸ் பிரமேச்சந்திரன் கேள்வி எழுப்பினார். வவுனியாவில் இன்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பின்…
மேலும்

யாழில் துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி (காணொளி)

Posted by - October 22, 2017
யாழ்ப்பாணம் மணியம்தோட்டத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இளைஞன், உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் பின்னர், யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த டொன் போஸ்கோ டெஸ்மன் என்ற இளைஞனுக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர…
மேலும்

புதிய அரசியலமைப்புக்கு நான் ஒப்பமிட மாட்டேன்- சபாநாயகர் கரு

Posted by - October 22, 2017
நாட்டை பிரிக்கும், நாட்டை துண்டாடும், பௌத்த மதத்துக்கு அல்லது வேறு சமயங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்த எந்தவொரு அரசியலமைப்பும் சட்ட மாக்கப்படுவதற்கு தேவையான சபாநாயகர் ஒப்பத்தை தான் ஒரு போதும் இடமாட்டேன் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இன்று…
மேலும்