நிலையவள்

மோட்டார் வாகனம் மோதியதில் ஒருவர் பலி

Posted by - March 9, 2018
குருணாகல் – புத்தளம் பிரதான வீதியில் சுதீரகம பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்…
மேலும்

இலஞ்ச ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்கும் தேசிய செயற்திட்டம்

Posted by - March 9, 2018
இலங்கையில் இருந்து இலஞ்ச ஊழல் மோசடிகளை முற்றுமுழுதாக இல்லாதொழிக்கும் தேசிய செயற்றிட்டம் வகுக்கப்படுகிறது. இதன் கீழ் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகளும் முற்றுமுழுதாக மறுசீரமைக்கப்படும் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான தெரிவித்தார். கொழும்பில் நேற்று…
மேலும்

சுகாதார பரிசோதகர்கள் அடையாள வேலைநிறுத்தம்

Posted by - March 9, 2018
வடமேல்மாகாண சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்த அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாக பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதிகாரிகள் தங்களது பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் தொடர்ச்சியாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும்…
மேலும்

ஹர்தால், கடையடைப்பில் ஈடுபடவேண்டாம் – அம்பாறை மாவட்ட முஸ்லிம்களிடம் வேண்டுகோள்

Posted by - March 9, 2018
ஏனைய சமூகங்களிடையே சமாதானம், சகோரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், அம்பாறை மாவட்டத்திற்கு வெளியே வாழ்ந்து வரும் முஸ்லிம்களின் பாதுகாப்பு நலன் கருதியும் இன்று வெள்ளிக்கிழமை (09) எந்தவித ஹர்தால் கடையடைப்பு செயற்பாடுகளிலும் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் ஈடுபட வேண்டாம் என…
மேலும்

தேர்தலில் தெரிவானவர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு

Posted by - March 9, 2018
அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்களின் விபரங்கள் இன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும்

உயிர், சொத்து சேதங்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை- ரணில்

Posted by - March 9, 2018
கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அசாரதாரண சூழ்நிலை காரணமாக இடம்பெற்ற உயிர் மற்றும் சொத்து சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இழப்பீடுகளை வழங்கும் நடவடிக்கைகளை வெகு விரைவில் நிறைவு செய்ய உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். பிரதமர்…
மேலும்

யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக பெண்கள் தின பேரணியில் ஓங்கி ஒலித்த தமிழ்ப்பெண்கள் உரிமைக்குரல்.

Posted by - March 9, 2018
யேர்மன் நாட்டின் தலைநகரம் பேர்லினில் அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பல்லின பெண்களுடன் இணைந்து தமிழ் பெண்கள் அமைப்பு உறுப்பினர்களும் ஈழத்தமிழ் பெண்களுக்கு நீதி கோருவதற்கான வாய்ப்பாக கடைப்பிடித்தார்கள். இப் பேரணியில் ஆயிரக்கணக்கான வேற்றின மக்கள் இணைந்து கொண்டனர். நடைபெற்ற பேரணியின்…
மேலும்

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிப் பிரயோகம் : மூவர் காயம், ஒருவரின் நிலை கவலைக்கிடம்

Posted by - March 8, 2018
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவத்தில் காயமடைந்த மூவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் சற்றுமுன்னர் கொட்டாஞ்சேனை சுமித்ராராம வீதியில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த மூவரில் ஒருவரின் நிலைமை…
மேலும்

இரத்தினபுரியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Posted by - March 8, 2018
இரத்தினபுரி, திம்முல்விட்டய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (07) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் உச்சமடைய ஒருவர் மற்றையவரை கூரிய…
மேலும்

மாத்தளை பகுதிக்கு விஷேட பொலிஸ் பாதுகாப்பு

Posted by - March 8, 2018
மாத்தளை நாஉல பொலிஸ் பிரிவுற்குற்பட்ட பிரதேசங்களுக்கு விஷேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதேசத்திலுள்ள மதஸ்தலங்கள் மற்றும் பொது நிலையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை அசாதாரண சூழ்நிலைகளுக்கு முகங்கொடுப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை தயார் நிலையில்…
மேலும்