நிலையவள்

எச்சரிக்கை – மணிக்கு 70 – 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்

Posted by - March 13, 2018
ஹம்பாந்தோட்டை முதல் மன்னார் வரையிலான காலி, கொழும்பு பகுதிகளில் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்து வரும் மணித்தியாலங்களில் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கடற்றொழிலாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி…
மேலும்

பிரதமர் பதவிக்கு நான் தகுதியானவர் – ஜோன் அமரதுங்க

Posted by - March 13, 2018
தான் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என சுற்றுலா மற்றும் கிறிஸ்துவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அடுத்ததாக உள்ள சிரேஷ்ட அமைச்சர் தான் எனவும் அவர் கூறியுள்ளார். வத்தளை பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தின் பின்னர்…
மேலும்

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் மூடல்

Posted by - March 13, 2018
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் இன்று(13) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. அம்மை நோய் பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதன் காரணமாக பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் உப பீடாதிபதி பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.…
மேலும்

5473 ஆசிரியர்களுக்கு இம்மாத இறுதியில் இடமாற்றம்

Posted by - March 13, 2018
10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பாடசாலையில் சேவையாற்றும் 6 -11 ம் தர ஆசிரியர்கள் 5473 பேருக்கு இம்மாத இறுதியில் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றம் மூன்று கட்டங்களாக இடம்பெறுவதுடன், இதன் முதல்…
மேலும்

முல்லைத்தீவு நாயாறு கடற்பிரதேசத்தில் மூன்று மீனவர்கள் மாயம்

Posted by - March 13, 2018
முல்லைத்தீவு நாயாறு கடற்பிரதேசத்தில் மீனவர்கள் சிலர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்றையதினம் (12) மீன் பிடிப்பதற்காக சென்ற மூன்று மீனவர்களே படகுடன் இவ்வாறு காணாமல் போயுள்ளனர். சிலாபம், பங்கதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான மில்ராஜ் மிரெண்டா, 48 வயதான…
மேலும்

வீட்டிலிருந்து விமானப் பாகங்கள் மீட்பு

Posted by - March 13, 2018
வீடொன்றில் இருந்து விமானப் பாகங்கள் சிலவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். பாணந்துறை அலுபோமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்தே குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மேற்கொண்ட திடீர்சோதனை நடவடிக்கையின் போதே இவ்வாறு விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளது. முன்னாள் விமானப்படை…
மேலும்

தீவிரவாதிகளுக்கு 1 மணி நேரம் அவகாசம் கொடுத்த பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை- ஹலீம்

Posted by - March 13, 2018
கண்டி தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்புத் துறையினருக்கு எதிராக பல்வேறு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து சட்டநடவடிக்கை எடுக்க அரசாங்கத்தைக் கோரியுள்ளதாகவும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார். கண்டி மாவட்ட…
மேலும்

16 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய வழக்கில் குற்றவாளிக்கு 15 வருட சிறைத்தண்டனை!!

Posted by - March 12, 2018
16 வயதுக்குட்பட்ட சிறுமியை கடத்திச் சென்று வன்புணர்வுக்குட்படுத்திய இளைஞனுக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று(12-03-2018) தீர்ப்பளித்தார். குற்றவாளியின் இந்தக் குற்றத்துக்கு உதவிய அவரது நண்பருக்கு 5 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட…
மேலும்

ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுடன் வீதிக்கிறங்க தயார்

Posted by - March 12, 2018
பேஸ்புக் பயன்படுத்தும் உரிமையை உறுதி செய்வதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுடன் வீதிக்கிறங்கி போராட தயாராக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறினார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட முறுகல் நிலை…
மேலும்

ஆனமடுவ வர்த்தக நிலையம் மீதான தாக்குதல் : ஏழு பேர் கைது

Posted by - March 12, 2018
ஆனமடுவ நகரில் அமைந்துள்ள மதீனா முஸ்லிம் ஹோட்டல் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடாத்தியதாக கூறப்கடும் சந்தேக நபர்கள் 7 பேரை ஆனமடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் நடாத்தப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பில் இன்று அதிகாலை…
மேலும்