நிலையவள்

அரசாங்கத்தையும் அரச தலைவர்களையும் விமர்சிக்கலாம் – அகிலவிராஜ்

Posted by - June 12, 2018
அரசாங்கத்தை மாத்திரமல்லாது அரச தலைவர்களையும் விமர்ச்சிக்கக்கூடிய சுதந்திரம் இன்று நாட்டிலிருப்பதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். குருநாகல் – இப்பாகமுவ மத்திய மகா வித்தியாலயத்தில் புதிய தொழில்நுட்பக் கட்டடத் தொகுதியைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு…
மேலும்

ஊடகவியலாளர் மஹேஷ் நிஸ்ஸங்க கைது

Posted by - June 12, 2018
அரச தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றின் ஊடகவியலாளரான மஹேஷ் நிஸ்ஸங்க கடவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளை எடேரமுள்ள பகுதியில் உள்ள உடற்கட்டு மையம் (Gym center) ஒன்றின் உரிமையாளர் மீது கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தியமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
மேலும்

இந்துக்களை கொச்சைப்படுத்தவே மஸ்தானுக்கு இந்து விவகார பிரதி அமைச்சு பதவி – வடிவேல் சுரேஸ்

Posted by - June 12, 2018
காதர் மஸ்தானுக்கு இந்து விவகார பிரதி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமையானது நாட்டிலுள்ள இந்துக்களை கொச்சைப்படுத்தும் செயல் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். ஸ்ரீகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது…
மேலும்

தனியார் சேவையிலிருந்து விலகும் விசேட வைத்தியர்கள்

Posted by - June 12, 2018
எதிர்வரும் 18ம் திகதியின் பின்னர் தனியார் வைத்திய சேவைகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக விஷேட வைத்திய நிபுனர்கள் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக விஷேட வைத்திய நிபுனர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர்…
மேலும்

புகையிரத தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் வேலைநிறுத்தம் இடைநிறுத்தம்

Posted by - June 12, 2018
புகையிரத தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கம் வேலைநிறுத்த யோசனையை கைவிட்டுள்ளது. தமது கோரிக்கைகளை நிறைவேற்றப்போவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து வேலைநிறுத்தத்தை கைவிடுவது என தீரமானித்ததாக தொழிற் சங்க கூட்டுக் கமிட்டியின் செயலாளர் கமல் பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்தத் தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு…
மேலும்

SLFP யின் 16 பேர் குழுவுடன் இன்று எந்த சந்திப்பும் இல்லை- பொய் என்கிறார் கோட்டாப

Posted by - June 12, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேர் கொண்ட குழு தன்னுடன் கலந்துரையாடலில் ஈடுபடப் போவதாக ஊடகங்களில் பிரச்சாரம் செய்த போதிலும், அவ்வாறான எந்தவொரு அழைப்பும் தனக்கு இதுவரையில் விடுக்கப்படவில்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாப ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.…
மேலும்

பொதுஜன பெரமுன மைத்திரியுடன் ஒருபோதும் கூட்டுச் சேராது- ஜி.எல்.

Posted by - June 12, 2018
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எந்தத் தேர்தலிலும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்காது என அக்கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். பத்தரமுல்லையில் நேற்று(11) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன  பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். எதிர்வரும்…
மேலும்

மஸ்தானுக்கு மீள் குடியேற்றம், இந்து விவகாரம் – அங்கஜனுக்கு விவசாய பிரதியமைச்சு

Posted by - June 12, 2018
புதிய இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அதன்படி இராஜாங்க அமைச்சர்கள் இருவர், பிரதி அமைச்சர்கள் ஐவருக்கு இன்று நியமனங்கள் வழங்கப்பட்டன. அதனடிப்படையில் வன்னி மாவட்ட…
மேலும்

மண்ணெண்ணெய் விலையை குறைக்க அமைச்சரவை அனுமதி

Posted by - June 12, 2018
மண்ணெண்ணெய் விலையை குறைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளளார். அதன்படி 101 ரூபவாக காணப்பட்ட மண்ணெண்ணெய் விலை 70 ரூபவாக குறைக்கப்படவுள்ளது.
மேலும்

80 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் பெண் ஒருவர் கைது

Posted by - June 11, 2018
80 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இன்று (11) அதிகாலை டுபாய் நாட்டில் இருந்து வருகை தந்த போதே குறித்த…
மேலும்