நிலையவள்

1000 ரூபா இலஞ்சம் பெற்ற சமூர்த்தி அதிகாரி கைது

Posted by - June 15, 2018
இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கொலோன்ன பிரதேச சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சமூர்த்தி பயனாளி ஒருவரால் கொலோன்ன சமூர்த்தி பிரஜா வங்கியில் விண்ணப்பிக்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபா கடன் தொகையை பெற்றுக்…
மேலும்

விடுதலைப் புலிகளின் தங்கம் தேடச் சென்றவர்கள் ஸ்கேனர் இயந்திரத்துடன் கைது

Posted by - June 15, 2018
இறுதி யுத்த காலத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் விடுதலைப் புலிகளால் நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள தங்கத்தை தேடி எடுப்பதற்காக, சென்ற நான்கு பேர் ஸ்கேனர் இயந்திரத்துடன், கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா, நொச்சிமோட்டைப் பிரதேசத்தில் வைத்து, இன்று (15) காலை பொலிஸ் விசேட…
மேலும்

பிரதி அமைச்சர் நலின் பண்டார இன்று FCID யில் வாக்கு மூலம்

Posted by - June 15, 2018
முகாமைத்துவம், சட்டம் மற்றும் ஒழுங்கு என்பவற்றுக்கான பிரதியமைச்சர் நலின் பண்டார வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்வதற்கான இன்று(15)காலை 10.30 மணியளவில்  நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். கடந்த அரசாங்க காலத்தில் இரண்டு கப்பல்களை கொள்வனவு செய்யும்…
மேலும்

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு சட்டத்தரணிகள் மேன்முறையீடு

Posted by - June 15, 2018
ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு மனுவொன்றை  ஞானசார தேரரின் சட்டத்தரணிகள் இன்று (15) தாக்கல் செய்துள்ளனர். காணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவத்தில் கடந்த மே மாதம் 24 ஆம் திகதி ஞானசார…
மேலும்

நாளை ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் – ஜம்இய்யத்துல் உலமா பிறைக்குழு

Posted by - June 15, 2018
ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதால் நாளை (16) சனிக்கிழமை நோன்புப் பெருநாள் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிறைக்குழு உத்தியோகபுர்வமாக சற்று முன்னர் அறிவித்தது. இன்று மஃரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரியவாயலில் கூடிய ஷவ்வால் பிறையைத் தீர்மானிக்கும் மாநாட்டிலேயே இந்த தீர்மானம்…
மேலும்

அரசாங்கத்திலிருந்து முற்றாக விலகும் வரை ஸ்ரீ ல.சு.க.யுடன் பேச்சுவார்த்தை இல்லை- மஹிந்த

Posted by - June 15, 2018
நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெளியேறுவதற்கு விரைவாக தீர்மானம் எடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். அரசாங்கத்திலிருந்து விலகியதன் பின்னரே இரு தரப்பும் பேச்சுவார்த்தை…
மேலும்

ஞானசாரரின் தண்டனை மனித உரிமைக்கு கிடைத்த வெற்றி- சர்வதேச மன்னிப்புச் சபை

Posted by - June 15, 2018
பொதுபல சேனாவின் ஞானசார தேரரிற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமையை இலங்கையின் மனித உரிமையை மதிப்பவர்களுக்கு கிடைத்த வெற்றி என சர்வதேச மன்னிப்புச்சபை   தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின்  மனைவி சந்தியாவை மிரட்டிய குற்றத்திற்காக பொதுபலசேனாவின் ஞானசார தேரரிற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே சர்வதேச மன்னிப்புச்சபையின்…
மேலும்

ஜனாதிபதி கிளிநொச்சியில் சிறுவர்களை பாதுகாப்போம் நிகழ்ச்சி திட்டத்தை ஆரம்பிக்க வருவது மிகவும் வேடிக்கையானது-சிறீதரன்

Posted by - June 15, 2018
தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்து அவருடைய பிள்ளைகளைக் காப்பாற்ற இயலாத ஜனாதிபதி கிளிநொச்சியில் சிறுவர்களை பாதுகாப்போம் நிகழ்ச்சி திட்டத்தை ஆரம்பிக்க வருவது மிகவும் வேடிக்கையானது. இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். “எதிர்வரும்…
மேலும்

மாணவன் தூக்கிட்டு தற்கொலை

Posted by - June 15, 2018
யாழ்ப்பாணம், வேலணை மத்திய கல்லூரியில் பாடசாலை விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 14 வயதுடைய மயூரன் மதுபன் என்ற மாணவனே நேற்று (14) இரவு இவ்வாறு பாடசாலை விடுதியின் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.…
மேலும்

ஹெரோயின் போதைப்பொருளுடன் வெலே சுதாவின் அடியாள் கைது

Posted by - June 15, 2018
பிரபல போதைப்பொருள் வர்த்தகரான வெலே சுதாவின் அடியாள் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். பிலியந்தல பிரதேசத்தில் வைத்து பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். கைது செய்யப்படும் போது அவரிடம் இருந்து…
மேலும்