நிலையவள்

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - July 13, 2018
ஹட்டன் நகரில் 713 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் இன்று (13) அதிகாலை, ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொலிஸ் பரிசோதகர் மொஹமட் ஜெமில் தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற பேருந்து…
மேலும்

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மூவர் கைது

Posted by - July 13, 2018
பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 3 பேர் இராஜங்கனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். அநுராதபுரம் பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஹிதோகம, தம்புத்தேகம, தலாவ…
மேலும்

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு

Posted by - July 13, 2018
பாண் தவிர்த்து பணிஸ், மாலு பணிஸ் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களையும் 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் 16ஆம் திகதியிலிருந்து இவ்வாறு விலையை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும்,…
மேலும்

மத்தல விமானநிலைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

Posted by - July 13, 2018
மத்தல விமானநிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த நான்காவது பாதுகாப்பு ஸ்கேனர் கருவி அகற்றப்பட்டுள்ளதால் விமானநிலையத்தின் பாதுகாப்பு மேலும் கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பயணிகள் வருகைதரும் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு ஸ்கேனர் கருவி அகற்றப்பட்டு அது பண்டாரநாயக்க விமானநிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் விமானநிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்தல விமானநிலையத்தில்…
மேலும்

வேலையில்லா பிரச்சினையை தீர்க்க தேசிய கொள்கையொன்று அவசியம் – JVP

Posted by - July 13, 2018
நாட்டில் வேலையில்லா பிரச்சினையை தீர்க்க ஒரு தேசிய கொள்கை அவசியம் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி இதனை தெரிவித்தார். ஒருவரின் தகுதியின் அடிப்படையில் வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான…
மேலும்

சட்டவிரோதமாக இயங்கிவந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

Posted by - July 13, 2018
கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்பிட்டிய மாதென்ன பகுதியில் வைத்து சட்டவிரோதமாக இயங்கிவந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டு ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் கசிப்புகளும், அதனை உற்பத்தி செய்ய பயன்படுத்திய உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறித்த சுற்றிவளைப்பின் போது கசிப்பு இஸ்பிரிட் 16000…
மேலும்

வீட்டுக்கு செல்ல நேர்ந்தாலும் ஊடகத்தில் அரசாங்கம் கை வைக்காது- நவீன்

Posted by - July 12, 2018
இந்த அரசாங்கம் நாட்டில் உள்ள நீதி மன்ற சுதந்திரத்திலும், ஊடக சுதந்திரத்திலும் கைவைக்க மாட்டாது எனவும், இந்த இரண்டினாலும் அரசாங்கம் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தாலும் பரவாயில்லை எனவும்  அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளருமாகிய நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். இந்த…
மேலும்

15 – 19 வயதிற்கும் இடைப்பட்ட யுவதிகளின் கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு

Posted by - July 12, 2018
15 வயதிற்கும், 19 வயதிற்கும் இடைப்பட்ட யுவதிகள் மத்தியில் கருக்கலைப்பு வீதம் அதிகரித்துள்ளது என்று காசல் வீதி, மகளீர் மருத்துவமனையின் விசேட நிபுணர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார். நேற்று அனுஷ்டிக்கப்பட்ட உலக சனத்தொகை தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற…
மேலும்

கடல் அட்டைகளை கடத்த முயன்ற இந்தியர் கைது

Posted by - July 12, 2018
ராமேஸ்வரம் பகுதியல் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஒருத்தொகை கடலட்டைகளுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ராமேஸ்வரம் அருகே சேராங்கோட்டை கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த ரூபா 6 இலட்சம் மதிப்பிலான சுமார் 300 கிலோகிராம் தடைசெய்யப்பட்ட அரியவகை கடல் அட்டைகளை…
மேலும்

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கான சந்தர்ப்பமொன்று சட்டத்தில் உள்ளது- சி.பி.ரத்நாயக்க

Posted by - July 12, 2018
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கான சந்தர்ப்பமொன்று சட்டத்தில் உள்ளது. எனினும் அதனை நாம் தற்போது வெளிப்படுத்த மாட்டோம் என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார். பத்தரமுல்லையில் இன்று…
மேலும்